இன்பம் என்றோர் உலகம் தோன்றி

நீ கேட்டது இன்பம் கிடைத்தது துன்பம்
வாழ்க்கை இதுதானோ? - எதிர்
பார்த்தது நிழலை அடைந்தது வெயிலைப்
பாடம் இது தானோ? (நீ கேட்ட)

பேசிப் பேசிப் பலநாள் பேசி
நேசம் வளர்த்து நெஞ்சம் மகிழ்ந்தே
ஆசைக் கனியாய் ஆகும் போது
அன்பை இழந்தால் லாபம் ஏது? (நீ கேட்ட)

துன்ப நரகில் சுழலும் உலகம்
துண்டு துண்டாய் உடைந்து அதிலே
இன்ப மென்றோர் உலகம் தோன்றி
ஏழைத் துயரைத் தீர்த்திடாதோ? (நீ கேட்ட)


கவிஞர் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (19-Mar-11, 3:40 pm)
பார்வை : 222


பிரபல கவிஞர்கள்

மேலே