மாற்றம் காணவே!

ரோட்டில் பள்ளம் மேடு எங்கும் பாருங்கள் - கோடை
ஆற்று மணல் காட்சி அங்குப் பாருங்கள்!
போக்குவரவை எச்சரிக்கும் செங்கொடி - அங்கே
ரோட்டின் ஓரம் காற்றிலாடப் பாருங்கள்! பழுது
பார்க்கும் தொழிலாளரைப் பாருங்கள்!
ஏற்றத் தாழ்வு இருக்குமிடம் எங்குமே
மாற்றம் காணவே பறக்கும் செங்கொடி!


கவிஞர் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (19-Mar-11, 3:41 pm)
பார்வை : 130


மேலே