கடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம்

கடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம்
கண்ணில் கண்ட மனிதனை எல்லாம் நலமா என்றாராம்
ஒரு மனிதன் வாழ்வை இனிமை என்றான்
ஒரு மனிதன் அதுவே கொடுமை என்றான்
படைத்தவனோ உடனே சிரித்து விட்டான்
ல ல லாலாலல லா
ல ல லாலாலல லா

கள்ளம் இல்லா பிள்ளை உள்ளம் நான் தந்தது
காசும் பணமும் ஆசையும் இங்கே யார் தந்தது (2)
எல்லை இல்லா நீரும் நிலமும் நான் தந்தது
இன்பம் துன்பம் என்னும் எண்ணம் ஏன் வந்தது
இறைவனுக்கே இது புரியவில்லை
மனிதனின் கொள்கை தெரியவில்லை
ஒரு மனிதன் அதுவே கொடுமை என்றான்
படைத்தவனோ உடனே சிரித்து விட்டான்
ல ல லாலாலல லா
ல ல லாலாலல லா

பள்ளி கூடம் செல்லும் வழியில் கடவுள் நின்றாராம்
பச்சை பிள்ளை மழலை மொழியில் தன்னை கண்டாராம்
உள்ளம் எங்கும் செல்லம் பொங்கும் அன்பை தந்தாராம்
உண்மை கண்டேன் போதும் என்று வானம் சென்றாராம்
ஒரு மனிதன் அதுவே கொடுமை என்றான்
படைத்தவனோ உடனே சிரித்து விட்டான்
ல ல லாலாலல லா
ல ல லாலாலல லா


கவிஞர் : கண்ணதாசன்(3-Dec-11, 3:52 pm)
பார்வை : 323


பிரபல கவிஞர்கள்

மேலே