தமிழ் கவிஞர்கள்
>>
சுப்பிரமணிய பாரதி
>>
தோத்திரப் பாடல்கள் சோமதேவன் புகழ்
தோத்திரப் பாடல்கள் சோமதேவன் புகழ்
ஜயசோம, ஜயசோம, ஜயசோம தேவா
ஜய ஜய.
சரணம்
நயமுடைய இந்திரனை நாயகத் திட்டாய்
வயமிக்க அசுரரின் மாயையைச் சுட்டாய்
வியனுலகில் ஆநந்த விண்ணிலவு பெய்தாய்
துயர்நீங்கி யென்னுளஞ் சுடர்கொளச் செய்தாய்
மயல்கொண்ட காதலரை மண்மிசைக் காப்பாய்
உயவேண்டி இருவருளம் ஒன்றுறக் கோப்பாய்
புயலிருண் டேகுமுறி யிருள்வீசி வரல்போற்
பொய்த்திரள் வருவதைப் புன்னகையில் மாய்ப்பாய்.
(ஜய)