ஆயினும்

முன்பிருந்ததைப் போலக் காடில்லை
அடர்ந்த புதர்களில் அணில்கள் பருக
நிழல் கரைந்த நீரில்லை
உயரக் கிளைகளில் உட்கார்ந்து
உலகம் காண முயலும் கிளியின் காலடியில்
பழமேதுல் இல்லை
மூங்கில் செடிகளில் கூரிலைகள்
அசையும் பச்சைக் கீற்றுகளில்லை
ஆயினும்
காடிருக்கின்றது
காடெனும் பெயரில்


கவிஞர் : யாழன் ஆதி(2-Nov-11, 5:11 pm)
பார்வை : 40


மேலே