யாழன் ஆதி குறிப்பு

(Yazhan Aathi)

 ()
பெயர் : யாழன் ஆதி
ஆங்கிலம் : Yazhan Aathi
பாலினம் : ஆண்
இடம் : தமிழ் நாடு, இந்தியா

யாழன் ஆதி தமிழில் எழுதிவரும் நவீனக் கவிஞர்களில் ஒருவர். இசை உதிர் காலம், செவிப்பறை, நெடுந்தீ, கஸ்பா ஆகிய தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். ஒடுக்கப்பட்ட மக்களின் இலக்கியமான தலித் இலக்கியத்தின் முக்கிய ஆளுமையாக செயல்பட்டுவரும் யாழன் ஆதி தலித் முரசு இதழில் முதல் பக்க கவிதைகளை எழுதிவருகின்றார். பல்வேறு இதழ்களில் படைப்புகள் வெளிவந்துகொண்டு இருக்கின்றன. இவருடைய கவிதைகள் ஆங்கிலம், மலையாளம் போன்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சேலத்திலிருக்கும் பெரியார் பல்கலைக்கழகம் இவருடைய செவிப்பறை நூலை பாடப்புத்தகமாக வைத்திருந்தது. பலபேர் இவருடைய கவிதைகளில் ஆய்வினை செய்துவருக்கின்றனர். கவிதை மட்டுமில்லாமல் அனைத்து இலக்கிய வகைமைகளிலும் அவருடைய பங்களிப்பு இருக்கின்றது. புதிய தலித் எழுத்தாளர்களைப் பற்றி இவர் எழுதிவரும் மாற்றுப் பாதை என்னும் கட்டுரைத்தொடரை எழுதி வருகிறார். சாம்பல் என்னும் குறும்படத்தையும் இவர் இயக்கி இருக்கின்றார்.
யாழன் ஆதி கவிதைகள்
தமிழ் கவிஞர்கள்

மேலே