உள்ளிருக்கும் எதுவும் வெளியி லில்லை

உள்ளிருக்கும் எதுவும்
வெளியி லில்லை
உள்ளிலிருந்துப் பரந்த ஒன்றே வெளி
உள்ளும்
வெளியும்
ஒன்றாகும் கணம் ஒன்றே
ஓர்மையின் உள்.

அடர்ந்த புல் தரை நோக்கி
விரட்டும் மேய்ப்பன்
மகிழ்ச்சியில் ஆநிரைகள்
வாழ்வின் அந்தியில் சேர்க்கிறது
வெளிறிய நரையும் திரைந்த தோலும்
கவலைகள் ஏதுமின்றி காய்கிறது நிலா.

எரியும் உலகில் நீள்கிறது தீ நாக்குகள்
இருளுக்குள்ளான வாழ்வில்
புலனாகும் வழி
தீபமொன்று ஏற்றப்பட்டால்.

அழகிய தோலும்
உறுதியான எலும்புகளும்
வேனிலில் உதிரும்
தென்னை மட்டைகள்
ரத்தம் நிரம்பிய
மதுக்குடுவையில்
தேடுவது எதை.

சன்னல்களை நோக்கி திருப்புகின்றன தங்கள் தளிர்களை
தொட்டிச்செடிகள்
சன்னல்களின் வழி நுழையும்
வெளிச்சக் கீற்றுகள்.

காத்திருக்கும் கிழக்கொக்கு
வேட்டை சூன்யம்
மீன்களற்ற குளம்.


கொன்றை மரத்தில் படரும்
ஓணான் கொடியில்
சிக்கித் துவள்கிறது பட்டாம்பூச்சி
சிக்கலற்றுப் பூத்திருக்கிறது
கொடிப்பூ.

யாரிடமும் இல்லை
யாரையும் சுத்தம் செய்யும்
தண்ணீர் மூலக்கூறுகள்.

வெண்கொக்குகள் வட்டமிடும்
வானின் வெளி
நட்சத்திரங்கள் பூக்கின்றன
விண்மீனாவதில்லை
உதிர்கின்ற மலரெதுவும்.


வானத்தில் பாதைகள்
பூமியில் நட்சத்திரங்கள்
காற்றில் ஒளி
ஒளியில் சுவாசம்
எதிலுமில்லை எதுவும்
புன்னகை செய்கிறார் துறவி.

மழித்தலின் துறவில்
மழிக்காதவைகள் வளர்ந்தால்
துறவியின் துறவு
மழிக்கத்
தகும்.
கொடிப்பூ.

யாரிடமும் இல்லை
யாரையும் சுத்தம் செய்யும்
தண்ணீர் மூலக்கூறுகள்.

வெண்கொக்குகள் வட்டமிடும்
வானின் வெளி
நட்சத்திரங்கள் பூக்கின்றன
விண்மீனாவதில்லை
உதிர்கின்ற மலரெதுவும்.

வானத்தில் பாதைகள்
பூமியில் நட்சத்திரங்கள்
காற்றில் ஒளி
ஒளியில் சுவாசம்
எதிலுமில்லை எதுவும்
புன்னகை செய்கிறார் துறவி.

மழித்தலின் துறவில்
மழிக்காதவைகள் வளர்ந்தால்
துறவியின் துறவு
மழிக்கத்
தகும்.


கவிஞர் : யாழன் ஆதி(2-Nov-11, 5:09 pm)
பார்வை : 55


பிரபல கவிஞர்கள்

மேலே