தமிழ் கவிஞர்கள்
>>
சுப்பிரமணிய பாரதி
>>
முருகக் கடவுள்மீது கிளித் தூது
முருகக் கடவுள்மீது கிளித் தூது
சொல்ல வல்லா யோ? -- கிளியே
சொல்ல நீ வல்லாயோ?
அனுபல்லவி
வல்ல வேல் முருகன் -- தனை இங்கு
வந்து கலந்து மகிழ்ந்து குலா வென்று (சொல்ல)
சரணங்கள்
தில்லை யம்பலத்தே -- நடனம்
செய்யும் அமரர்பிரான் -- அவன்
செல்வத் திருமகனை -- இங்கு வந்து
சேர்ந்து கலந்து மகிழ்ந்திடு வாயென்று (சொல்ல) 1
அல்லிக் குளத்தருகே -- ஒரு நாள்
அந்திப் பொழுதினிலே -- அங்கொர்
முல்லைச் செடியதன்பாற் -- செய்த வினை
முற்றும் மறந்திடக் கற்றதென் னேயென்று (சொல்ல) 2
பாலை வனத்திடையே -- தனைக்கைப்
பற்றி நடக்கையிலே -- தன்னகை
வேலின் மிசையாணை -- வைத்துச் சொன்ன
விந்தை மொழிகளைச் சிந்தைசெய்வா யென்று (சொல்ல) 3
‘குருவெற்பு’ என்பது திருநெல்வேலிக்கு அண்மையிலுள்ள
சுப்பிரமணிய க்ஷேத்திரமாகிய ‘குரு மலை’ என்னும்
ஊராகும்.
‘நின் சேவகம்’ என்பதற்குப் பதிலாகத் ‘திருப்புகழ்’ என்றும்
ஒரு பாடம் உண்டு.
பிரபல கவிஞர்கள்

தபு ஷங்கர்
Thabu Shankar

ஞானக்கூத்தன்
Gnanakoothan

வ. ஐ. ச. ஜெயபாலன்
V. I. S. Jayapalan

கனிமொழி
Kanimozhi
