வானெங்கும் என்றென்றும் புன்னகை
வானெங்கும் நீ மின்ன மின்ன
நானென்ன நானென்ன பண்ண?
என் எண்ணக் கிண்ணத்தில்
நீ உன்னை ஊற்றினாய்
கை அள்ளியே வெண் விண்ணிலே
ஏன் வண்ணம் மாற்றினாய்?
வானெங்கும் நீ மின்ன மின்ன
நானென்ன நானென்ன பண்ண?
என் வானவில்லிலே
நீ நூல் பறிக்கிறாய்
அந்நூலிலே உன் நெஞ்சினை
ஏன் கோக்கப் பார்க்கிறாய்?
ஓஹோ ப்ரிய ப்ரியா
இதயத்தில் அதிர்வு நீயா?
எனது உணர்விகள் தவம் கிடந்ததே
தரை வந்த வரம் நீயா?
பூக்கள் இல்லா உலகினிலே....
பூக்கள் இல்லா உலகினிலே
வாழ்ந்தேனே உன்னைக் காணும் வரை
நான் இன்றோ பூவுக்குள்ளே சிறை
பெண் வாசம் என் வாழ்வில்
இல்லை என்றேனே
உன் வாசம் நுரையீரல் - நான்
தீண்டக் கண்டேனே
மூச்சும் முட்டத்தான் உன் மேல்
காதல் கொண்டேனே!
வானெங்கும் நீ மின்ன மின்ன
நானென்ன நானென்ன பண்ண?
பாலை ஒன்றாய் வறண்டிருந்தேன்...
நீ காதல் நதியென வந்தாய்
என் வாழ்வில் பசுமைகள் தந்தாய்...
என் நெஞ்சம் நீர் என்றால்
நீந்தும் மீனா நீ?
என் காதல் காடென்றால்
மேயும் மானா நீ?
எந்தன் வெட்கத் தீயில் குளிர்
காயும் ஆணா நீ?
வானெங்கும் நீ மின்ன மின்ன
நானென்ன நானென்ன பண்ண?
பிரபல கவிஞர்கள்
![Thabu Shankar](https://eluthu.com/poem-small-thumb/131.jpg)
தபு ஷங்கர்
Thabu Shankar
![Gnanakoothan](https://eluthu.com/poem-small-thumb/129.jpg)
ஞானக்கூத்தன்
Gnanakoothan
![V. I. S. Jayapalan](https://eluthu.com/poem-small-thumb/128.jpg)
வ. ஐ. ச. ஜெயபாலன்
V. I. S. Jayapalan
![Kanimozhi](https://eluthu.com/poem-small-thumb/127.jpg)
கனிமொழி
Kanimozhi
![Leena Manimegalai](https://eluthu.com/poem-small-thumb/126.jpg)