மெல்லத் தமிழ்இனிச் சாகும்

"புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழில் இல்லை

சொல்லவுங் கூடுவதில்லை அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழ்இனிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்"

என்றந்தப் பேதை உரைத்தான் - ஆ!
இந்தவசையெனக் கெய்திட லாமோ
சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்

தந்தை அருள் வலியாலும் - இன்று
சார்ந்த புலவர் தவவலியாலும்
இந்தப் பெரும்பழி தீரும் - புகழ்
ஏறிப் புவிமிசை யென்றும் இருப்பேன்.


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(9-Sep-14, 4:34 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே