மோகத்தை கொன்றுவிடு - Barathiyar Kavithai

மோகத்தை கொன்று விடு அல்லால்
எந்தன் மூச்சை நிறுத்தி விடு…
தேகத்தை சாய்த்து விடு அல்லால்
அதில் சிந்தனை மாய்த்து விடு…
யோகத் திருத்தி விடு அல்லால்
இந்த ஊனைச் சிதைத்து விடு…
ஏகத் திருந்துலகம் இங்குழனைதையும் செய்பவளே.
பந்தத்தை நீக்கி விடு அல்லால்
உயிர் பாரத்தை போக்கி விடு…
சிந்தையைத் தெளிவாக்கு அல்லால்
இதை செத்த உடலாக்கு…
இந்த பதர்களை ஏன் எல்லாம்
என எண்ணி இருப்பேனோ…
எந்த பொருளிலுமே உளேன்நேன்று இயங்கி இருப்பவளே.
உள்ளம் குளிராதோ பொய்யாலவா
ஊனம் ஊழியதோ…
கள்ளம் உருகாதோ அம்மா பற்றி
கண்ணீர் பெறுகிறதோ…
வெள்ள கருணையிலே இன்ன சிறு
வேட்கை தணியாதோ…
விளர்கரியவளே அனைத்திலும் மேவி இருப்பவளே.


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(8-Sep-15, 12:42 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே