நல்லதோர் வீணைசெய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?

நல்லதோர் வீணைசெய்தே
அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
நல்லதோர் வீணைசெய்தே
அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி!
எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்தது விட்டாய்.
சொல்லடி சிவசக்தி!
எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்தது விட்டாய்.
வல்லமை தாராயோ
வல்லமை தாராயோ
இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே
வல்லமை தாராயோ
இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே
சொல்லடி சிவசக்தி!
நிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ
நல்லதோர் வீணைசெய்தே
அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
தசையினை தீ சுடினும்
சிவசக்தியை பாடும்நல் அகம் கேட்டேன்
நசையறு மனங்கேட்டேன்
நித்தம் நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்
அசைவறு மதிகேட்டேன்
இவை அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ?
இவை அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ?
நல்லதோர் வீணைசெய்தே
அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
நல்லதோர் வீணைசெய்தே
அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(9-Sep-15, 4:44 pm)
பார்வை : 0


மேலே