ஃபை ஃபை ஃபை கலாய்ச்சிஃபை பாண்டிய நாடு

fy fy fy கலாய்ச்சிfy
கருப்பா! நீ வா என்ன கலாய்ச்சிfy!
fy fy fy சொதப்பிfy
பொறுப்பா நீ இருக்காத சொதப்பிfy!

வெக்கத்த வேணான்னு ஓட்டிfy
நெஞ்சோட நீங்காம ஒட்டிfy
முட்டாயி முத்தத்த
வாயோட வாய் வெச்சு fy fy fy

செல்லுக் கட மாமா - என்
செல்லச் செல்ல மாமா நீ
சொல்லச் சொல்ல காதல் வரும் நீ tellyfy!
ஆசை இல்லா ஆணா நீ
சிம்மு இல்லா ஃபோனா நீ
சிக்னல் இங்க fullன்னாலும் - ஏன் thinkify?

டச்சு டச்சு ஸ்க்ரீனாட்டம்
முன்ன வந்து நின்னேன்
என்ன வந்து நீ நோண்டிfy fy
பச்ச பச்சையாக என்
இச்சை எல்லாம் சொன்னேன்
அச்சம் எல்லாம் நீ போக்கிfy fy fy fy fy

பஞ்சாயத்த கூட்டிfy
எட்டுப் பட்டி கேட்டுfy
நியாயம் எது தர்மம் எது நீ பாத்துfy!
நாட்டத்த நான் சொல்லிfy
குத்தம்முன்னு தள்ளிfy
நாட்டாம உன் தீர்ப்ப கொஞ்சம் நீ மாத்திfy!

திக்கு திக்கு பேச்சால
கொக்கி கொக்கி போட்டு
என்ன என்ன நீ தூக்கிfy fy
நெல்லி வட்டுக் கண்ணால
அல்லி மொட்டு மேல
தட்டி தட்டி நீ தாக்கிfy fy fy fy fy


கவிஞர் : மதன் கார்க்கி வைரமுத்து(2-May-14, 3:00 pm)
பார்வை : 0


மேலே