இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா

இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா
உதடு சிரிக்கும் நேரம் உள்ளம் சிரிக்குமா
உருவம் போடும் வேஷம் உண்மை ஆகுமா
விளக்கை குடத்தில் வைத்தால் வெளிச்சம் தோன்றுமா
வீட்டு குயிலை கூண்டில் வைத்தால் பாட்டு பாடுமா பாட்டு
பாடுமா

மனதை வைத்த இறைவன் அதில் நினைவை வைத்தானே
சில மனிதர்களை அறிந்து கொள்ளும் அறிவை வைத்தானே
அறிவை வைத்த இறைவன் மேனி அழகை வைத்தானே
அழகு கண்ட மனிதன் பெண்ணை அடிமை செய்தானே அடிமை
செய்தானே

உருகிவிட்ட மெழுகினிலே ஒளி ஏது
உடைந்து விட்ட சிலையினிலே அழகேது
பழுது பட்ட கோவிலிலே தெய்வம் ஏது
பனி படர்ந்த பாதையிலே பயணம் ஏது
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா


கவிஞர் : கண்ணதாசன்(3-Dec-11, 4:02 pm)
பார்வை : 172


மேலே