மயக்கம் எனது தாயகம்

மயக்கம் எனது தாயகம்
மௌனம் எனது தாய்மொழி
கலக்கம் எனது காவியம்
நான் கண்ணீர் வரைந்த ஓவியம்

பகலில் தோன்றும் நிலவு
கண் பார்வைக்கு மறைந்த அழகு
திரை மூடிய சிலை நான்
துன்பச் சிறையில் மலைந்த மலர் நான்

நானே எனக்குப் பகையானேன் – என்
நாடகத்தில் தான் திரை ஆனேன்
தேனே உனக்குப் புரியாது
அந்த தெய்வம் வராமல் விளங்காது
விதியும் மதியும் வேறம்மா – அதன்
விளக்கம் நான் தான் பாரம்மா
மதியில் வந்தவள் நீயம்மா – என்
வழி மறைத்தாள் விதியம்மா


கவிஞர் : கண்ணதாசன்(3-Dec-11, 5:15 pm)
பார்வை : 111


மேலே