Lakshmi - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Lakshmi |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 21-Sep-2020 |
பார்த்தவர்கள் | : 163 |
புள்ளி | : 0 |
கதை: ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் ஆசிரியர்: ஜெயகாந்தன்
வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் படைத்த ஒரு பெண்ணின் கதை இது.வாழ்க்கையையே நாடகமாக நினைத்து, அதில் கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் எதுவானாலும் திறம்பட செய்துமுடிக்க வேண்டும் என்று எண்ணுகிறாள் கல்யாணி.
தாமரை இலையின் மேல் உள்ள தண்ணீர் போல எல்லா பாத்திரங்களையும் ஏற்கும் பக்குவம் அவளிடம் தென்படுகிறது. நாடக நடிகையாக வலம்வரும் அவள், ரங்கா என்னும் பத்திரிகையாளனிடம் தன் மனதை இழக்கிறாள். காதலில் இனிமையாக வாழ்க்கை செல்கையில், திருமணம் அவர்களுக்கு நடுவில் விரிசலை உண்டாக்குகிறது.
கல்யாணியின் பண்பட்ட மனமும், தன்னை விட அவளது அந்தஸ
கதை :தென்பாண்டி சிங்கம்
ஆசிரியர் :கலைஞர் கருணாநிதி
ஆங்கிலேய ஆதிக்கம் பெரும் நோயைப் போல இந்தியா எங்கிலும் பரவ, அவர்களை எதிர்த்து முதலில் களமிறங்கிய வீரபாண்டிய கட்டபொம்மனை நாம் இன்றளவிலும் போற்றி வருகிறோம் . அவரது வீரத்தின் சிறிதும் குறையாத மன்னன் ஒருவன் சூழ்ச்சியால் விழுந்த கதை தான் தென்பாண்டி சிங்கம்.
கட்டபொம்மனை தூக்கிலிட்டதும் ,அவரது தம்பி ஊமைத்துரை மருது பாண்டியர்களுடன் சேர்ந்து ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்தார். அதனால் சிவகங்கை மாவட்டம், காளையார் கோவிலை தன் ஆட்சிக்குக் கொண்டு வர திட்டமிட்டது ஆங்கிலேய அரசு. அதனை சிறிதும் விரும்பாத மருது சகோதரர்கள், தங்கள் ஆட்சிக்குட்பட்ட கள்ளர் நாடுகளி
சங்ககால இராஜ வாழ்க்கைக்கும், தற்கால தேசத் தொண்ட வாழ்க்கைக்கும் நடுவில் சிக்கி தவிக்கும் குமாரலிங்கத்தின் கதைதான் இந்த சோலைமலை இளவரசி.
குமாரலிங்கம், தனது பூர்வ ஜென்ம நினைவுகளால் சிக்கித் தவிக்கிறான். 300 ஆண்டுகளுக்கு முன்பு ,ஆங்கிலேயரை எதிர்த்த மாறனேந்தல் இளவரசன், உலகநாத தேவனாக தன்னை கனவில் காண்கிறான்.
ஆங்கிலேயரிடம் இருந்து தப்பிக்க, சோலைமலை அரண்மனைக்குள் உலகநாதன் புக், அந்நாட்டின் இளவரசி அவனுக்கு உதவிக்கரம் கொடுக்கிறாள். இருவரும் காதலில் திளைத்திருக்கையில், விதி அவனை ஆங்கிலேயர்களின் சிக்க வைக்கிறது.
அந்த இளவரசியை,தனக்கு தற்போது உதவும் பொன்னம்மாளாக நேரில் பார்ப்பவனுக்கு திகைப்பு உண்ட
30 வயதை கடந்தும் தனியாளாய் வாழ்க்கையை எதிர்கொள்ளும் கௌரிக்கு திடீரென்று ஒரு வெறுமை ஏற்படுகிறது.
உயிர் இருக்கிறது என்று உடலும், உடல் இருக்கிறது என்று வயிறும்,வயிற்றுக்காக வேலையும், வேலைக்காக ஒரு அலங்காரமும், என்று பிடிப்பில்லாமல் செல்கிறது அவள் வாழ்க்கை.
தான் குடியிருக்கும் ஒண்டி குடுத்தன வீட்டில் தங்கியிருக்கும், தன்னைப்போல அனாதையான முதலியாரிடம் கருணை பிறக்கிறது.
ஆண் பெண் உறவுகள் பெரியதொரு மேம்பாடு காணாமல் இருந்த 1960களில் இதுபோன்ற ஒரு கரை கதை காண்பது அரிது.
அன்பிற்கு முதல்படி கருணை அன்றோ!!! தனிமனித உணர்வுகளையும் அவர்களது தாழ்மை மனப்பான்மையையும், அவர்களது வெறுமைகளையும் அவர்களே விவர