சோலைமலை இளவரசி

(Tamil Nool / Book Vimarsanam)

சோலைமலை இளவரசி விமர்சனம். Tamil Books Review
சங்ககால இராஜ வாழ்க்கைக்கும், தற்கால தேசத் தொண்ட வாழ்க்கைக்கும் நடுவில் சிக்கி தவிக்கும் குமாரலிங்கத்தின் கதைதான் இந்த சோலைமலை இளவரசி.

குமாரலிங்கம், தனது பூர்வ ஜென்ம நினைவுகளால் சிக்கித் தவிக்கிறான். 300 ஆண்டுகளுக்கு முன்பு ,ஆங்கிலேயரை எதிர்த்த மாறனேந்தல் இளவரசன், உலகநாத தேவனாக தன்னை கனவில் காண்கிறான்.

ஆங்கிலேயரிடம் இருந்து தப்பிக்க, சோலைமலை அரண்மனைக்குள் உலகநாதன் புக், அந்நாட்டின் இளவரசி அவனுக்கு உதவிக்கரம் கொடுக்கிறாள். இருவரும் காதலில் திளைத்திருக்கையில், விதி அவனை ஆங்கிலேயர்களின் சிக்க வைக்கிறது.

அந்த இளவரசியை,தனக்கு தற்போது உதவும் பொன்னம்மாளாக நேரில் பார்ப்பவனுக்கு திகைப்பு உண்டாகிறது .கனவில் கண்ட நிகழ்ச்சிகள் போல நேரிலும் நடப்பதால், சொல்லோன்னா ஆச்சர்யத்தில் ஆழ்கிறான்.

நிகழ்காலத்தில் அதே போல் ஆங்கிலேயரிடம் சிக்கி தப்பித்து வருபவன், பொன்னம்மாள் சித்த பிரமை பிடித்தவளாக இருப்பதை காண்கிறான். தன்னையே சோலைமலை இளவரசியாக அவள் வரித்து அக்கால நிகழ்வுகளில் மூழ்க, குமாரலிங்கம் மனம் நொந்து சாமியார் ஆகிறான்.

சங்க கால நிகழ்வு ஒன்று, அதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த உண்மை நிகழ்வு ஒன்று என்று விறுவிறுப்பாக செல்கிறது கதை.

குமாரலிங்கம்,கால நிகழ்வுகளால் கட்டுண்டு சிக்கித் தவிக்கையில் பிற்காலத்தில் வந்த சில திரைப்படங்கள் கண்முன் தோன்றுகின்றன.

எது உண்மை, எது கனவு என்று தெரியாமல் குமாரலிங்கம் தவிப்பது அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

உலகநாதனின் இறப்பு செய்தியை கூறி, தற்கால குமாரலிங்கம் சாவை எதிர்நோக்கி காத்திருக்கையில் எதிர்பாரா முடிவுடன் அமைந்துள்ளது கதை.

சேர்த்தவர் : Lakshmi
நாள் : 23-Sep-20, 10:28 pm

சோலைமலை இளவரசி தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே