பாலமுருகன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : பாலமுருகன் |
இடம் | : சிங்கப்பூர் |
பிறந்த தேதி | : 12-Feb-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 08-Apr-2014 |
பார்த்தவர்கள் | : 23 |
புள்ளி | : 1 |
தமிழ் மடியில் தவழ ஆசை
துவண்டு போன மனசுக்குள்ளும்
துரத்துகின்றது உன் நினைவுகள்...
தூக்கமில்லாத இரவுகளாலும்
துன்பத்தில் மூழ்கின்ற பகல்களாலும்
துடிப்படங்கி போகிறது வாழ்க்கை...!
எனக்குள்ளே நோயாய் உன் பிரிவு
என்னுயிரை தினம் வதைக்கிறது...
எரிமலையாய் வெடித்து சிதறும் இதயத்துக்கு
ஏன் மருந்தாய் உன்னைத்தர மறுக்கிறாய்?
எழுதிய விதியா?எழுதா விதியா இந்த வலி?
அன்பே உலகத்துக்கு நீ ஒருவன்
ஆனால் எனக்கு நீதான் உலகம்
அன்றில் பறவையாய் நீயும் நானும்
அகிலத்தில் பிரிவின்றி வாழவேண்டும்
ஆருயிரே தடைகளை தாண்டி வந்து விடு.. (...)
மனிதனை மனிதன்
அடிமை கொள்கிறான்,
அழிக்க முயல்கிறான்,
மனிதனை மனிதன்
சுரண்டி வாழ்கிறான்
அன்றுதொட்டு இன்றுவரை
மனிதனே மனிதனின்
முதன்மையான எதிரியாக
விளங்கி வருகிறான்
அம்மா!!
உன் கருவறையில் நானிருந்து
உதைத்தது- உன்னை
நோகடிக்க அல்ல,
எட்டு மாதமாய் சுமக்கும்- உன்
முகம் பார்க்கவே.
பிஞ்சு வயதில் நான் அழுதது- பசியினால் அல்ல,
பால் குடிக்கும் சாட்டில்- உன்
இதயத்தை முத்தமிட.
பள்ளியில் என்னை சேர்க்கும்போது-நான் அழுதது
பயத்தினால் அல்ல,
உன் பாசத்தை பிரிகிறேனோ-
என்ற பயத்தினால்.
இளமையில் நான் அழுதது-
காதலில் கலங்கி அல்ல,
கல்யாணம் உன்னிடத்தில் இருந்து என்னை- பிரிக்குமோ என்ற பயத்தினால்.
நான் விமானம் ஏறும்போது அழுதது-பிரிகிறேன் என்றல்ல,
நான் உழைத்து (...)