எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

துவண்டு போன மனசுக்குள்ளும் துரத்துகின்றது உன் நினைவுகள்... தூக்கமில்லாத...

துவண்டு போன மனசுக்குள்ளும்
துரத்துகின்றது உன் நினைவுகள்...
தூக்கமில்லாத இரவுகளாலும்
துன்பத்தில் மூழ்கின்ற பகல்களாலும்
துடிப்படங்கி போகிறது வாழ்க்கை...!

எனக்குள்ளே நோயாய் உன் பிரிவு
என்னுயிரை தினம் வதைக்கிறது...
எரிமலையாய் வெடித்து சிதறும் இதயத்துக்கு
ஏன் மருந்தாய் உன்னைத்தர மறுக்கிறாய்?
எழுதிய விதியா?எழுதா விதியா இந்த வலி?

அன்பே உலகத்துக்கு நீ ஒருவன்
ஆனால் எனக்கு நீதான் உலகம்
அன்றில் பறவையாய் நீயும் நானும்
அகிலத்தில் பிரிவின்றி வாழவேண்டும்
ஆருயிரே தடைகளை தாண்டி வந்து விடு...!

பதிவு : பாலமுருகன்
நாள் : 13-Apr-14, 5:57 pm

மேலே