எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அம்மா!! உன் கருவறையில் நானிருந்து உதைத்தது- உன்னை நோகடிக்க...

அம்மா!!
உன் கருவறையில் நானிருந்து
உதைத்தது- உன்னை
நோகடிக்க அல்ல,
எட்டு மாதமாய் சுமக்கும்- உன்
முகம் பார்க்கவே.

பிஞ்சு வயதில் நான் அழுதது- பசியினால் அல்ல,
பால் குடிக்கும் சாட்டில்- உன்
இதயத்தை முத்தமிட.

பள்ளியில் என்னை சேர்க்கும்போது-நான் அழுதது
பயத்தினால் அல்ல,
உன் பாசத்தை பிரிகிறேனோ-
என்ற பயத்தினால்.

இளமையில் நான் அழுதது-
காதலில் கலங்கி அல்ல,
கல்யாணம் உன்னிடத்தில் இருந்து என்னை- பிரிக்குமோ என்ற பயத்தினால்.

நான் விமானம் ஏறும்போது அழுதது-பிரிகிறேன் என்றல்ல,
நான் உழைத்து உன்னை
பார்க்கப்போகிறேன்- என்ற
ஆனந்தத்தில்.

இங்கு தனிமையில் அழுகிறேன்- உறவுகள் இல்லாமல் அல்ல,
என் தாய் அன்பு காணாமல்.

அம்மா!

உன் இறப்பின் பின் நான் அழுவேன்- நீ இறந்ததால் அல்ல,
உலகில் பாசமே இறந்ததால்.

உனக்கு முன் நான் இறந்தால்,
அம்மா- நீ அழவேண்டாம்
ஏன் என்றால்-
மறு ஜென்மம் நீயே என் பிள்ளை.

என் அம்மாவிற்க்கு சமர்ப்பணம்.

பதிவு : பாலமுருகன்
நாள் : 9-Apr-14, 6:58 pm

மேலே