இளமாறன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : இளமாறன் |
இடம் | : யாழ்ப்பாணம் |
பிறந்த தேதி | : 05-Dec-2004 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-May-2021 |
பார்த்தவர்கள் | : 34 |
புள்ளி | : 3 |
நந்திக் கடற்கரையில் நான் நடந்து போகையிலே
காற்றில் மிதந்து வருகிறது உன் சலங்கைச் சத்தம்
அந்திச் சூரியனை நான் ஆராயும் வேளையிலும்
காதோரம் ஒலிக்கிறது அது நித்தம்.. நித்தம்..
அன்று காரிருளில் கை கோர்த்து நடக்கையிலே
பிரிவிற்காய் பரிந்தளித்தாய் நீ ஓர் காதல் முத்தம்
இன்று இறுதிப் படையெடுப்பில் இடர் படும் பொழுதினிலும்
உனை நினைத்து உருகுகிறது என் சித்தம்... சித்தம்...
Q=IT ஐ பிரதி செய்தேன் உன்
பார்வையின் ஏற்றத்தை(Charge) பகுக்க முடியவில்லை
F=ma ஐ இறுதி செய்தேன் உன்
விழிகளின் விசையை(Force) விளக்க முடியவில்லை
f=1/T ஆல் உன் அசைவுகளின் அதிர்வெண்ணை (Frequency)
அளக்க இயலவில்லை - ஆகையால்
T= r F sin θ ஆல் உன் முகச்சுளிப்பின்
முறுக்கத்தை(Torque) கணிக்க முயலவில்லை
மொத்தத்தில் நீயே என் ஆருயிர் காதலி
என்றும் நிலையான பிளாங்கின் மாறிலி (Plank's constant)
நாம் சேரும் வாழ்க்கை என்றென்றும் ஓர் முடிவிலி (Infinity)
நம் நட்பின் முன் சமன்பாடுகளும் ஓர் சமனிலி (inequality)