ஆராஅமைதி ஆனந்தம் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஆராஅமைதி ஆனந்தம்
இடம்:  சென்னை - 600063
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  13-Apr-2017
பார்த்தவர்கள்:  47
புள்ளி:  3

என்னைப் பற்றி...

தலைமை வரைதொழில் அலுவலர், நெடுஞ்சாலைத்துறை,

என் படைப்புகள்
ஆராஅமைதி ஆனந்தம் செய்திகள்
ஆராஅமைதி ஆனந்தம் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Apr-2017 8:13 pm

ஒருங்குறியில் தமிழ் உட்பட இந்திய மொழிகள் - சிக்கல்கள் மற்றும் தீர்வுகள்

அன்றைய பழந்தமிழும் இன்றைய இந்திய மொழிகளும்

ஆதி காலத்தில், இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் 'பழந்தமிழ்' வழங்கி வந்த போது, ஆரியர்கள் ஊடுருவினார்கள் ஆண்டார்கள் சென்றார்கள்.
அவர்கள் சென்ற பிறகும் இங்குள்ள சிலபலர், வட இந்தியாவில் வெளி நாட்டு ஆரிய மொழியை முன்னிருத்தியதால், ‘பழந்தமிழ்' மொழி பிரிந்து பிரிந்து கிளைத்து கிளைத்து தற்போதிள்ள இந்தி முதலிய வட நாட்டு மொழிகளாக உள்ளன.

தென்னாட்டவர்கள் வெளி நாட்டு ஆரிய மொழியை வடமொழி என அடைமொழி கொடுத்தனர். அப்போது தென்னாட்டில் பழந்தமிழ் சங்கத் தமிழாக மேம்பாடு அடைந்து தென் மொழி என

மேலும்

ஆராஅமைதி ஆனந்தம் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Apr-2017 8:06 pm

ஒருங்குறியில் தமிழ் உட்பட இந்திய மொழிகள் - சிக்கல்கள் மற்றும் தீர்வுகள்

அன்றைய பழந்தமிழும் இன்றைய இந்திய மொழிகளும்

ஆதி காலத்தில், இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் 'பழந்தமிழ்' வழங்கி வந்த போது, ஆரியர்கள் ஊடுருவினார்கள் ஆண்டார்கள் சென்றார்கள்.
அவர்கள் சென்ற பிறகும் இங்குள்ள சிலபலர், வட இந்தியாவில் வெளி நாட்டு ஆரிய மொழியை முன்னிருத்தியதால், ‘பழந்தமிழ்' மொழி பிரிந்து பிரிந்து கிளைத்து கிளைத்து தற்போதிள்ள இந்தி முதலிய வட நாட்டு மொழிகளாக உள்ளன.

தென்னாட்டவர்கள் வெளி நாட்டு ஆரிய மொழியை வடமொழி என அடைமொழி கொடுத்தனர். அப்போது தென்னாட்டில் பழந்தமிழ் சங்கத் தமிழாக மேம்பாடு அடைந்து தென் மொழி என

மேலும்

ஆராஅமைதி ஆனந்தம் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Apr-2017 5:54 pm

தமிழ் எழுத்து சீர்திருத்தம்

உலகில் இயற்கை மொழி தமிழ் ஒன்றுதான்.

இப்பூவுலகை, ஏன் இந்த அண்டத்தையே மூன்று வகைக்குள் அடக்கலாம். அவை:

(1) உயிர்கள்,
(2) உயிரில்லாப் பொருட்கள்,
(3) உயிருள்ள பொருட்கள்.

அது போல் உலகில் உள்ள மொழிகளை, மூன்றாக வகைப்படுத்தலாம். அவை:

(1) குறை இயற்கை மொழிகள். (Below Natural Languages). அதாவது, உயிர் எழுத்து, மெய் எழுத்து மட்டும் உள்ளவை, (உதாரணம்: ஆங்கிலம்)

(2) இயற்கை மொழிகள். (Natural Language). அதாவது, உயிர் எழுத்து, மெய் எழுத்துடன், உயிர்மெய் எழுத்து மட்டும் உள்ளவை, (உதாரணம்: தமிழ்)

(3) செயற்கை மொழிகள். (Unnatural Languages) அதாவது, உயிர் எழுத்து,

மேலும்

ஆராஅமைதி ஆனந்தம் - காயத்ரி பாலகிருஷ்ணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Dec-2014 9:50 am

1. எழுத்து சீர்த்திருத்தம்பற்றிய ஓர் அறிமுகம்

தொடர்பாடல் ஊடகம் என்றவகையில் மொழி தனது இருப்பை காலந்தோறும் நிலைநிறுத்திக் கொண்டு வருகின்றது . அந்த வகையில் மொழியில் மாற்றம் என்பது யாராலும் மறுக்க முடியாத ஒன்றாகும். “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்” எனப் பாரதியாரால் போற்றப்பட்ட மொழி தமிழ் மொழி. இம்மொழியில் 247 எழுத்துக்கள் தற்போது காணப்படுகின்றன. இந்த எருத்துக்கள் ஒவ்வொன்றும் காலத் தேவைக்கு ஏற்ப தமது வடிவத்தில் மாற்றத்தை உள்வாங்கிக் கொண்டு இருக்கின்றன. இவ்வாறு எழுத்தின் வரி வடிவத்தில் இன்று வரை ஏற்பட்டு வருகின்ற மாற்றமே எழுத்து சீரத்திருத்தம் என்று அழைக்கப்படுகின்றது.

மேலும்

இப்பூவுலகை ஏன் இந்த அண்டத்தையே மூன்று வகைக்குள் அடக்கலாம். அவை: (1) உயிர்கள், (2) உயிரில்லாப் பொருட்கள், (3) உயிருள்ள பொருட்கள். அது போல் உலகில் உள்ள மொழிகளை, மூன்றாக வகைப்படுத்தலாம். அவை: (1) குறை இயற்கை மொழிகள். (Below Natural Languages). அதாவது, உயிர் எழுத்து, மெய் எழுத்து மட்டும் உள்ளவை, (உதாரணம்: ஆங்கிலம்) (2) இயற்கை மொழிகள். (Natural Language). அதாவது, உயிர் எழுத்து, மெய் எழுத்துடன், உயிர்மெய் எழுத்து மட்டும் உள்ளவை, (உதாரணம்: தமிழ்) (3) செயற்கை மொழிகள். (Unnatural Languages) அதாவது, உயிர் எழுத்து, மெய் எழுத்து, உயிர்மெய் எழுத்துடன், ஒட்டு எழுத்து, கூட்டு எழுத்து போன்று உள்ளவை (உதாரணம்: மலையாளம்) மற்றும் எழுத்துகளே இல்லாமல் கருத்துப் படங்கள் மட்டும் உள்ள மொழிகள் (உதாரணம்: சீனம்) எனக்குத் தெரிந்த வரை, இப்பூவுலகில், தமிழ் மட்டுமே இயற்கை மொழியாகத் (Natural Language) திகழ்கிறது எனலாம். தமிழ் எழுத்து சீர்திருத்தம். எனினும், தமிழ் எழுத்துகள் சிலபல சீரற்றதாக அமைந்துள்ளன. அவற்றை சீர்திருத்துவது அவசியம். உடம்புடன் உயிர் சேரும்போது உடம்பு ஈருருவாக, மூவுருவாக மாறுவதில்லை. அதுபோல் மெய் (எழுத்தும்) உயிருடன் (எழுத்துடன்) சேரும் போது ஓர் எழுத்தாக தொல்காப்பியர் மற்றும் திருவள்ளுவர் காலங்களில் இருந்தன. தற்போதுள்ள தமிழ் எழுத்துகள் பல்லவர் காலத்தில் ஈருவாகவும் மூவுருவாகவும் சீரற்ற ஓருருவாகவும் மாறி அமைந்துவிட்டன. தற்போது தட்டச்சு இயந்திரம் காலாவதி ஆகிவிட்டதாலும் உயிர்ச் சின்னங்களை கணினியில் பொருத்துவதில் சிக்கல் இருப்பதாலும் அதனால் கணியத்திறன் ஆங்கிலம் போன்று இல்லாததாலும் தமிழ் எழுத்துகளை ஓருருவாக மீண்டும் மாற்றிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஓருருவாக்குதல் அதற்கு, "ஆ" முதல் "ஔ" வரை உள்ள உயிர்ச் சின்னங்களை மெய்யின் மீது புள்ளி இருக்கும் இடத்தில் அமைத்தால் உயிர்மெய்கள் சீரான ஓருருவாக அமைந்துவிடும். மேலும், ஊ, ஔ ஆகிய இரண்டு உயிர் எழுத்துகள் ஈருருவாக உள்ளன. அவைகளையும் ஓருருவாக மாற்றி அமைத்தால் நல்லது. “ஹ” எனும் எழுத்து மிகவும் பெரியதாக உள்ளது. இதற்குப் பதில் “௪” எனும் எழுத்தைப் பயன்படுத்தலாம். “ட” எனும் எழுத்து சமச்சீராக இல்லை. இந்த எழுத்தில் உள்ள செங்குத்துக் கோட்டை மையத்திற்கு நகர்த்தினால் தலைகீழ் “T” ஆக மாறி இருக்கும். அந்த தலைகீழ் “T” - யை “ட” எனும் எழுத்துக்குப் பதிலாக பயன்படுத்தலாம். இதனால், தமிழ் எழுத்துகள் ஓருருவாக அமைவதோடு தற்போது கணினியில் உயிர்ச் சின்னத்தை இருத்தும் போது ஏற்படும் குறைபாடுகளும் நீங்கிவிடும். "ஆ" முதல் "ஔ" வரை புதிய உயிர்ச் சின்னங்கள் கீழே தரப்பட்டுள்ளன: (1) ஆ (AA) - கிடைக்கோடு (2) இ (I) - முன்சாய்வுக்கோடு (3) ஈ (II) - முன்சாய்வுக் கோட்டின் முடிவில் சுழி (4) உ (U) - பின்சாய்வுககோடு (5) ஊ (UU) - பின்சாய்வுக் கோட்டின் முடிவில் சுழி (6) எ (E) - கிடைக்கோட்டின் மேல் இடப்பக்கமாக சுழியும் (7) ஏ (EE) - கிடைக்கோட்டின் மேல் வலப்பக்கமாக சுழியும் (8) ஐ (AI) - கிடைக்கோட்டின் மேல் இருபக்கமும் சுழி (9) ஒ (O) - கிடைக்கோட்டின் கீழ் இடப்பக்கமாக சுழி (10) ஓ (OO) - கிடைக்கோட்டின் கீழ் வலப்பக்கமாக சுழி (11) ஔ (AU) - கிடைக் கோட்டின் கீழ் இருபக்கம் சுழி. 1. Hyphen for ஆ (AA), 2. Forward Hyphen for இ (I), 3. Forward Hyphen with a ring at top for ஈ (II) 4. Backward Hyphen for உ (U), 5. Backward Hyphen with a ring at top for ஊ (UU), 6. Left end ring ABOVE Hyphen for எ (E), 7. Right end ring ABOVE Hyphen for ஏ (EE), 8. Both end ring ABOVE Hyphen for ஐ (AI), 9. Left end ring BELOW Hyphen for ஒ (O), 10. Right end ring BELOW Hyphen for ஓ (OO), 11. Both end ring BELOW Hyphen for ஔ (AU) எல்லா தமிழ் எழுத்துகளும் ஓரெழுத்தாக சீர்திருத்த குறைந்தது 50 ஆண்டு கால இடை வெளியில் நீண்ட காலத் திட்டமாக நிறைவேற்ற வேண்டும். 13-Apr-2017 5:44 pm
மேலும்...
கருத்துகள்

மேலே