இளவரசன் கி - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : இளவரசன் கி |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 02-Jul-2018 |
பார்த்தவர்கள் | : 76 |
புள்ளி | : 9 |
மற்றும் ஒரு நாள்
எல்லாம் மாறும் என்றெண்ணி
மாயை பூசி கொண்ட
மற்றும் ஒரு நாள்
இநத ஆண்டின் முதல் நாளில்
இப்படிதான்
கண்டெடுக்க எண்ணி எனை
ஆண்டு முழுதும்
தொலைந்து போய்....
கண்டெடுக்கும் முயற்சியில்
மற்றும் ஒரு நாள்......
வேடிக்கைக்கும் கேளிக்கைக்கும்
காரணம் வேண்டி
வேதனைக்கும் சோகத்திற்கும்
விரும்பாத விடுதலை தரும்
மற்றும் ஒரு நாள்....
வழியில் நான்
வழித்துணையுடன் நீ
கடந்து போகிறாய் தூரமாய்
மறைந்து போகிறாய் விழி திரையில்
அங்கேயே நிற்கிறேன் நான்
பயண பாதை மறந்து
யாருக்கோ காத்திருப்பது போல்
வரவே மாட்டாய் என்று தெரிந்தும்...
காலி இருக்கை
நிரம்பி இருக்கிறாய்
அப்படியே
அன்று போல்
உன் நினைவுகளுடன்
நான்.
முன்னொரு நாள் அறம் என்றாய்
தீது நன்று என்று வகை சொன்னாய்
நீதி என்றாய் அதற்கெதிர் அநீதி என்றாய்
நல்லன தழைக்கும் என்றாய்
தீயவை வழுக்கும் என்றாய்
கல் என்றாய் கற்றது போல் நில் என்றாய்
சொல்லில் குற்றம் கூடாது என்றாய்...
சிறு தூர பயணத்தின் முடிவில்
மாற்றம் வேண்டும் என்றாய்
நீயே மாறி நின்றாய்.....
விதிகளை வேண்டும் போது வளைத்து கொண்டாய்
சதிகளை பிறர் அறியாவண்ணம் அரங்கேற்றினாய்
உள்ளத்தின் ஊனம் மறைக்க
உடைகளை அழுக்கு நீக்கினாய்
கள்ள குணம் மறைக்க முகத்தில் புன்னகை பூசிக்கொண்டாய்
ஆங்காங்கே கலப்படம் கலந்த உண்மைகளுடன்
உன்னையே (ஏ)மாற்றி கொண்டாய்
உன் கொடூர முகங்களை இரவுகளுக்கு ம