நிழல் என்கின்ற உன் நிஜம்

முன்னொரு நாள் அறம் என்றாய்
தீது நன்று என்று வகை சொன்னாய்
நீதி என்றாய் அதற்கெதிர் அநீதி என்றாய்
நல்லன தழைக்கும் என்றாய்
தீயவை வழுக்கும் என்றாய்
கல் என்றாய் கற்றது போல் நில் என்றாய்
சொல்லில் குற்றம் கூடாது என்றாய்...
சிறு தூர பயணத்தின் முடிவில்
மாற்றம் வேண்டும் என்றாய்
நீயே மாறி நின்றாய்.....
விதிகளை வேண்டும் போது வளைத்து கொண்டாய்
சதிகளை பிறர் அறியாவண்ணம் அரங்கேற்றினாய்
உள்ளத்தின் ஊனம் மறைக்க
உடைகளை அழுக்கு நீக்கினாய்
கள்ள குணம் மறைக்க முகத்தில் புன்னகை பூசிக்கொண்டாய்
ஆங்காங்கே கலப்படம் கலந்த உண்மைகளுடன்
உன்னையே (ஏ)மாற்றி கொண்டாய்
உன் கொடூர முகங்களை இரவுகளுக்கு மட்டும் வெளிச்சமிட்டாய்
உறவுகளையும் உணர்வுகளையும் குழப்பிக்கொண்டாய்
முகம்களுக்கு அரிதாரமிட்டாய்
அகத்தின் அடையாளம் இழந்தாய்
நீ அறம் பேசும்போதெல்லாம்
உன் (ஏ)மாற்றத்தை உணர்கிறேன் நான்
இப்படிக்கு
நிழல் என்கின்ற உன் நிஜம் (மனசாட்சி)