அவளுக்கு தாய்மை
சேய்போல் என் மடியில் சாய்ந்து
சேய்போல் சிரித்தாள்
அப்படியே வாரி அணைத்தேன் ,
அவள் கண்களின் ஓரத்தில் நாணம் ,
என் காதில் மெல்ல கூறினாய்
எனக்கிப்போது இந்த க்ஷணம்
புளிப்பு மாங்காய் சாப்பிட ஆசை
வாங்கித்தருவாயா அன்பே என்றாள்
அவள் முகத்தில் தாய்மை தெரிந்தது
என்னுள் நாளைய தந்தை நான்
என்ற புது நினைப்பு .............
அப்படியே என்னவளை மலர்போல் அள்ளி
பஞ்சணையில் படுக்க வைத்து........
இதோ அவள் கேட்ட மாங்காய்க்கு
கடை நோக்கி நான் பனிகொட்டும்
மார்கழி மாதத்தில் .........