கலியுகக் கண்மணி

கதை பார்த்து
கற்பனை யானைக்கு
காலில் அடி என்று
கலங்கி அழும்
கபடமற்ற குழந்தையைக்
காணவில்லை
கண்ணெதிரே செல்லக்
கண்மணிக் குட்டி
கைதட்டிச் சிரித்தாள்
கடவுளே என்றேன்
கனவுலகை நனவாக
கற்பனை செய்து தான்
காணும் நிஜ உலகில்
கஷ்டப் படுவதைத் தவிர்க்க
கலிகாலத்துப் படைப்பே
கண்மணி போல் குழந்தை
கற்பனைக் காட்சிகளின்
கசப்புகளை ஏற்காமல்
களிப்புற்று மகிழும் அவள்
கயமை மிக்க இவ்வுலகை
கலங்காமல் எதிர்கொள்வாள்
கழிவிரக்கம் சுய இரக்கம்
காக்காது உன் மகளை
கணப்பொழுது இரக்கத்துக்குப்பின்
கண்டு கொள்ளாமல்
காயப்படுத்தும் இவ்வுலகில்
கண்ணின் படைப்பு
கண்ணீர் விட அல்ல
கலங்காதே என் மகளே
காதில் கேட்டது அச்ரீரியின் குரல்.

எழுதியவர் : நாங்குநேரி வாசஸ்ரீ (24-Oct-18, 9:35 am)
பார்வை : 875

மேலே