நாங்குநேரி வாசஸ்ரீ - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  நாங்குநேரி வாசஸ்ரீ
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  10-Oct-2018
பார்த்தவர்கள்:  556
புள்ளி:  30

என் படைப்புகள்
நாங்குநேரி வாசஸ்ரீ செய்திகள்
நாங்குநேரி வாசஸ்ரீ - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Nov-2018 2:24 pm

கண்டவர் கண்படும்
கட்டழகி என் காதலி
அவளைக் கண்ட
அந்த கணம் முதல்
தேடி அலைந்தேன்
தேன் கூட்டில் மானை
தென்னந்தோப்பில் மீனை
மாங்கனியில் தேனை கடைசியில்
மறந்து போனேன் என்னை
கடற்கரையில் வந்த தேவதை என்
கட்டுடலில் புகுந்து மனதில்
வார்த்தைகளைக் கோர்த்தாள்
வடிவழகி அவளைப் புகழ
கவிதை வடிவில் தமிழ்த் தேவதை
கவிஞன் எனை ஆட்கொண்டாள்
கவிதையில் மயங்கி
கற்பனையில் திளைத்து பின்
கண்டுணர்ந்தேன் என்னவளைவிட
என் உயிருடன் கலந்துவிட்ட
என் தமிழழகியே பேரழகி.

மேலும்

நாங்குநேரி வாசஸ்ரீ - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Oct-2018 6:37 pm

கண்ணே
கண்மணியே
கற்பகமே என்
காதலியே...
காதென்ன செவிடா
கைபேசியின் ரிங்க்டோனுக்குப்பின்
கணவனின் குரல்

மேலும்

நாங்குநேரி வாசஸ்ரீ - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Oct-2018 7:43 pm

விலைக்கு வாங்கி
வீசப்பட்ட மாதுளை
விம்மி அழுதது
எதிரில் நின்ற கிளியின்
எக்கத்தாள வார்த்தைகளால்
பளபளப்பாக தோட்டத்தில்
பொத்தி வளர்க்கப்பட்டு
கடையில் மக்களின்
கவனத்தை ஈர்த்து
மாடி வீட்டு
மேசையை
பாங்காக அலங்கரித்து
பத்து நாள் போனவுடன்
பக்கத்திலிருந்த குப்பை மேட்டில்
பாவம் நீ
எப்பவோ தெரியும்
உன் பிறப்பு எனக்கு
உணவாகத்தான் என்று .

மேலும்

நாங்குநேரி வாசஸ்ரீ - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Oct-2018 6:56 pm

அன்னையின் குரல்
ஆதங்கத்தோடு
என் மேல் உனக்கு
ஏன் இந்த வெறுப்பு
என் முகம் பார்க்க
எத்தனை தயக்கம்
பல் துலக்கும் பசை முதல்
படுத்துறங்கும் பாய் வரை
அந்நியன் தயவிலே
அலுக்காமல் வாழ்கிறாய்
சங்கங்கள் அமைத்து
சரித்திரம் படைத்த உன்
பாட்டனின் வரலாற்றைக்
படிக்க கண்களையுமா
கடன் வாங்குவாய்
முகவரி கொடுத்தவளின்
முகத்தை மறக்கலாமா?
தமிழன் என்ற இறுமாப்போடு
தரணியில் நடமாடும் நீ
தயங்காது தமிழ் பேசு-இது
தமிழன்னையான என் வேண்டுகோள்.

மேலும்

நாங்குநேரி வாசஸ்ரீ - நாங்குநேரி வாசஸ்ரீ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Oct-2018 1:00 pm

முட்டுச் சந்தில் ஒரு
முடிவில்லாப் போராட்டம்
மூன்று நாய்களுக்கும் தெரு
முக்குப் பிச்சைக்காரனுக்கும்
முற்பகலில் சிற்றுண்டிக்குப்பின்
முக்கிய தலைவர்கள் வீசிய இலையிலிருந்து
மூன்று இட்லி வடைகளை உண்பதற்காக
முழக்கத்துடன் தொடங்கிய
'முன்னேற்றுவோம் இந்தியாவை ' கூட்டத்தின்
முடிவில் தலைவர்களின் உறுதிமொழி
மூச்சிருக்கும் வரை இந்தியாவின்
மூலை முடுக்கெல்லாம் சென்று
முயற்சித்து வறுமையற்ற வளமிக்க
முன்னேறிய தேசத்தை உருவாக்குவது .

மேலும்

நன்றி சகோதரரே. 19-Oct-2018 1:34 pm
அருமை 17-Oct-2018 5:27 pm

கொலு

அங்கொன்றும் இங்கொன்றுமாய்
அணையா விளக்குகள்

வண்ண வண்ணமாய்
வானில் மலர்கள் பூத்தது போல்

அழகழகான புதுமைகள் படிகளெங்கும்
அலங்கார உடையணிந்து

மலர்கள் சூடி மனதை
மயக்கும் தோற்றத்துடன்

அவற்றிலொரு புதுமையின்
ஆதங்கக் குரல் இங்கே

என்னை எடுத்துச் செல்ல
எவரேனும் வாரீரோ

விரும்பி யாம் அமரவில்லை எம்மை
விருப்பத்துடன் தொடுவாருமில்லை

நடுத்தரகர்களின் பலவித
நயவஞ்சக உரைகளாலே

விலை பேசப்பட்டு நாங்கள்
விற்பனைக்கு இங்கே

இவர்களின் வியாபாரம்
இன்றோடு முடிவதில்லை

காசுள்ள கீழ் மனத்தோர்
காமுற்ற போதெல்லாம்

புது மணப் பெண்களாய் நாங்கள்
புதிய இடம் செல்ல வே

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே