என் அழகி

கண்டவர் கண்படும்
கட்டழகி என் காதலி
அவளைக் கண்ட
அந்த கணம் முதல்
தேடி அலைந்தேன்
தேன் கூட்டில் மானை
தென்னந்தோப்பில் மீனை
மாங்கனியில் தேனை கடைசியில்
மறந்து போனேன் என்னை
கடற்கரையில் வந்த தேவதை என்
கட்டுடலில் புகுந்து மனதில்
வார்த்தைகளைக் கோர்த்தாள்
வடிவழகி அவளைப் புகழ
கவிதை வடிவில் தமிழ்த் தேவதை
கவிஞன் எனை ஆட்கொண்டாள்
கவிதையில் மயங்கி
கற்பனையில் திளைத்து பின்
கண்டுணர்ந்தேன் என்னவளைவிட
என் உயிருடன் கலந்துவிட்ட
என் தமிழழகியே பேரழகி.

எழுதியவர் : நாங்குநேரி வாசஸ்ரீ (2-Nov-18, 2:24 pm)
Tanglish : en azhagi
பார்வை : 421

மேலே