நினைப்பும் நிதர்சனமும்

முட்டுச் சந்தில் ஒரு
முடிவில்லாப் போராட்டம்
மூன்று நாய்களுக்கும் தெரு
முக்குப் பிச்சைக்காரனுக்கும்
முற்பகலில் சிற்றுண்டிக்குப்பின்
முக்கிய தலைவர்கள் வீசிய இலையிலிருந்து
மூன்று இட்லி வடைகளை உண்பதற்காக
முழக்கத்துடன் தொடங்கிய
'முன்னேற்றுவோம் இந்தியாவை ' கூட்டத்தின்
முடிவில் தலைவர்களின் உறுதிமொழி
மூச்சிருக்கும் வரை இந்தியாவின்
மூலை முடுக்கெல்லாம் சென்று
முயற்சித்து வறுமையற்ற வளமிக்க
முன்னேறிய தேசத்தை உருவாக்குவது .

எழுதியவர் : நாங்குநேரி வாஸஸ்ரீ (17-Oct-18, 1:00 pm)
பார்வை : 78

மேலே