மாதுளையின் கண்ணீர்
விலைக்கு வாங்கி
வீசப்பட்ட மாதுளை
விம்மி அழுதது
எதிரில் நின்ற கிளியின்
எக்கத்தாள வார்த்தைகளால்
பளபளப்பாக தோட்டத்தில்
பொத்தி வளர்க்கப்பட்டு
கடையில் மக்களின்
கவனத்தை ஈர்த்து
மாடி வீட்டு
மேசையை
பாங்காக அலங்கரித்து
பத்து நாள் போனவுடன்
பக்கத்திலிருந்த குப்பை மேட்டில்
பாவம் நீ
எப்பவோ தெரியும்
உன் பிறப்பு எனக்கு
உணவாகத்தான் என்று .