மரங்கள் நமக்கு வரங்கள்
உயிருள்ளவைக்கு உற்ற நண்பன் மரங்கள் -அவைதரும்
உயிர்வாயு நமக்கும் விலையில்லா வரங்கள்
விறகும் சருகும் அவைகளின்
பிள்ளைகள்
விதை விழுந்து எழுந்துவரும் சோலைகள்
சுவாசிக்கும் காற்று கூட சுத்தமாகாது
சுத்திகரிக்க இவை இல்லையென்றால்
சுதாரித்துக் கொண்டு வாழ்வோம்
சுற்றுச்சூழலை மரம் ஊன்றி காப்போம்...