Ganesh anbu - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Ganesh anbu
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  10-Apr-2014
பார்த்தவர்கள்:  47
புள்ளி:  0

என் படைப்புகள்
Ganesh anbu செய்திகள்
Ganesh anbu - தேன்மொழி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Apr-2014 9:23 pm

பறவைகள் பாட
குளிர்ந்த முகிலாட
தென்றலும் நதியும் இசைக்க
இயற்கை சூழ்ந்த
அழகிய நதிக்கறையில்
தவஅக்னியொன்று
வானுலகை சுட்டது.

எண்ணமோ கொடுமை!!
செய்த தவமோ கடுமை!!
"என்ன வரம் கேட்பானோ
இந்தக் கொடூரன்?"
நடுங்கினர் தேவாதிதேவரும்.

தவத்தின் வெட்பம்
கயிலாயம் தாக்க
காட்சி தந்தார்
கயிலாயனாதர்!!

அகமகிழ்ந்தான்
அசுரன் –தஞ்சாசுரன்!!

“என்ன வரம் வேண்டும்?”
ஆழ்ந்து யோசித்தான்,
மரணமில்லா பெருவாழ்வை
மறுத்திடுவான் என்றறிந்து,
தந்திரமாய்க் கேட்டான்
“ஆண் மகனால் நான் அழியேன்,
தவம் செய்த தடம்
தம் பெயரால் விளங்க”
தஞ்சாசுரன்!!

“தஞ்சனே!!
உனக்கு மரணமெனில் பெண்ணாலே
நீ தவம் செய்த இவ்

மேலும்

புராணத்தை கவியாக்கிய விதம் அருமை. அசத்தல் !! 17-Apr-2014 11:53 pm
தங்கள் கருத்துக்கு நன்றி தோழரே. நம் வரலாற்றில் பல ஆதாரம் அற்றவையே. அவற்றில் சில கற்பனைக்கதையாகவும் இருக்கலாம், உண்மையானதாகவும் இருக்கலாம். தஞ்சாவூர் என பெயர் வர இதுமட்டும் அல்லாமல் இன்னும் பல காரணங்கள் கூட நம் வரலாற்றில் இருக்கலாம். இத்தல வரலாறு செவி வழி கதையாக இருப்பினும், சரஸ்வதி மஹால் நூல் நிலையத்திலிருந்து முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்களால் ஆதாரங்களுடன் தொகுத்த புத்தகத்திலும் படித்திருக்கிறேன். அதுமட்டுமல்லாமல் இக்கோவிலின் சுவற்றிலும் இக்கதை எழுதப்பட்டிருகிறது. தங்கள் கருத்துக்கும் உடையார் நூல் குறித்த தங்களது தகவலுக்கும் நன்றிகள். 17-Apr-2014 9:42 pm
அருமையான கவிதை தொகுப்பு உங்கள் பாட்டி சொன்ன தலவரலாற்றை,கவித்துவமாக எழுத்து உள்ளீர்கள்.ஆனால் இது போன்ற கதைகள் அசுரன் இருந்தான் என்பன போன்றஅறிவுக்கு ஒவ்வா கதைகள் புனையப்பட்டவையே, தஞ்சையை சோழர்களுக்கு முன் ஆட்சி செய்தவர்கள் முத்தரையர்கள், அப்பொழுது வல்லத்தை மையமாக கொண்டு தஞ்சைய முத்தரையன் என்பவன் ஆட்சி செய்தான் என்பதற்கு சான்றுகள் உள்ளன, இவன் பெயராலே தஞ்சை என்று பெயர் பெற்றதாகவும் சில செய்திகள் உண்டு ஆனால் அதற்கு தக்க ஆதாரங்கள் இல்லை, தஞ்சை முத்தரையர்களே அழித்தே விஜயாலய சோழன் சோழ சாம்ப்ராஜியத்தை இங்கே நிறுவினார், ஒரு சாம்ப்ராஜியத்தை அழித்த அவர்களை ஏளனம் செய்வது தொன்றுதொட்டு இருக்கும் பழக்கம்,அதுவும் முத்தரையர்களை காட்டுமிராண்டிகளாகவும்,அரக்கர்போலவும் சோழர்கள் நடத்தினார்கள் என்பதை உடையார் நாவலில் படித்தேன்,இன்னும் சில நூல்களிலும் படித்து இருக்கின்றேன், அவ்வாறு தஞ்சைய முத்தரையன் என்ற அந்த மனன்னை அரக்கனாக சித்தரித்து புனையப்பட்ட வரலாறாக இருக்கலாம். 10-Apr-2014 12:29 pm
Ganesh anbu - தேன்மொழி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Apr-2014 7:48 pm

கற்றேன் ஆயிரம்
நல்லவை காட்டினாய்
தீயவை கூட்டினாய்.

இங்கு
அன்பு காட்ட ஆளில்லை
ஆளுகொரு பக்கம்.
பரிவு காட்ட ஆளில்லை
பரபரப்பில் அனைவரும்.

விழுந்து கிடப்பவனை
தூக்கவும் கையில்லை,
விருந்து படைக்க
வீட்டிலும் ஆளில்லை.

வேலை கிடைத்தது
அவனுக்கு மட்டுமல்ல,
அவன் கைகளுக்கும்தான்
கைப்பேசியால்.

கூக்குரலிட்டாலும்
கூடுவதற்கு நாதியில்லை.
இங்கு
"இயர் போன்"
மாட்டிகொண்டு அலையும்
கூட்டமே அதிகம்.

ஏன் வாழ்கிறோம்
என்று தெரியாமலேயே
வாழும் கூட்டம்.
மன்னிக்கவும் சொற்பிழை,
"வசிக்கும் கூட்டம்".

அவசர அவசரமாய்
அலாரம் சத்தத்தில் எழுந்து,
குக்கர் விசிலில் சமைத்து,
வாகனங்களின் அலற

மேலும்

மிக்க நன்றி!! 22-Apr-2014 7:07 pm
மிக்க நன்றி!! 22-Apr-2014 7:06 pm
மிக்க நன்றி!! 22-Apr-2014 7:05 pm
மிக்க நன்றி!! 22-Apr-2014 7:01 pm
கருத்துகள்

மேலே