Jacob - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Jacob
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  22-Feb-2021
பார்த்தவர்கள்:  13
புள்ளி:  1

என் படைப்புகள்
Jacob செய்திகள்
Jacob - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Feb-2021 11:55 am

சாம்பலான கந்தகப்பூக்கள்

காகிதப் பூக்களாய்
கரிமங்களில் கரைகிறது
மெக்னீசிய பூச்சிகளின்
வாழ்வு ...!

தூக்கி வீசியெறியப்பட்ட
தூக்குச்சட்டிகள் கதைக்கின்றன
கஞ்சிக்கு வழியில்லாது
கருகிப் போன
கந்தகப்பூக்களின் வரலாற்றை..!

அந்தோ..! பரிதாபம்,
இரைதேடச் சென்ற
இருவாட்சிகள் எரிந்து
சாம்பலான செய்தியறியாது
வாசலோரம் காத்திருந்தது
குஞ்சொன்று ...!

மெட்டிகள் தேடுகின்றன
நெருப்புக்குள் தொலைத்த
ஒற்றைக்கால் செருப்பை..!

மத்தாப்புகள் சிரிக்கின்றன
மண்டையோடுகளை
விலை பேசுவதால்...!

பற்றியெரியும் பாஸ்பரஸ்
ரசாயன குவியலுக்குள்
புதைந்து விடுகிறது
நரகாசுரர்களின் விதிமீறிய
சதிகள

மேலும்

கருத்துகள்

மேலே