Jeba - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Jeba |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 20-Jan-2018 |
பார்த்தவர்கள் | : 16 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
Jeba செய்திகள்
பிரம்படியின் வலியையும்
சொல்லடியின் வலியையும்
பிரிவு தரும் வலியையும்
ஏமாற்றத்தின் வலியையும்
துரோகம் இழைக்கும் வலியையும்
துன்பத்தினால் வலியையும்
காயத்தின் வலியையும்
மனக்காயத்தின் வலியையும்
இழப்பின் வலியையும்....
இத்தனை இத்தனை விதமாய்
இன்னும் எத்தனையோ வலியை உணர்ந்தாலும்....
இதே போல தான்
மற்றவருக்கும் வலிக்கும்
என்ற வலியை உணராததாலே
வலி இங்கே நிரந்தரமாகி விட்டது...
விடியும் நாள்
எந்நாளென்று அறியாது
நேற்று இன்று நாளை என்று
சொல்ல பழக்கிவிட்டது கொரோனா...
வாரத்தில் ஏழு நாளும் மறைந்து
மாதத்தின் முப்பதும் கலைந்து
மூன்று நாட்களை கொண்டே
நகர்கிறது இக்காலம் .....
காமராசரை போலவோ
கலாமை போலவோ
வள்ளலாரைப் போலவே
வள்ளுவரைப் போலவோ
வாழ்ந்து காட்டாவிடினும் - உன்
வழியில் சிறப்பாய் வாழ்ந்து விடு...
இவனைப் போல வாழ் என்று
இவ்வுலகம் சொல்லாவிடினும்
இவனைப் போல வாழ்ந்து விடாதே என்று சொல்லாத அளவு வாழ்ந்திடு....
மற்றவருக்கு பயந்து வாழாதே
மனசாட்சிக்கு பயந்து வாழ்ந்திடு... மரணத்திற்குப் பிறகும் - பலர்
மனதில் வாழும் பாக்கியம்
நீ பெற்றால் வாழ்க்கை வரலாறே....
பிரம்படியின் வலியையும்
சொல்லடியின் வலியையும்
பிரிவு தரும் வலியையும்
ஏமாற்றத்தின் வலியையும்
துரோகம் இழைக்கும் வலியையும்
துன்பத்தினால் வலியையும்
காயத்தின் வலியையும்
மனக்காயத்தின் வலியையும்
இழப்பின் வலியையும்....
இத்தனை இத்தனை விதமாய்
இன்னும் எத்தனையோ வலியை உணர்ந்தாலும்....
இதே போல தான்
மற்றவருக்கும் வலிக்கும்
என்ற வலியை உணராததாலே
வலி இங்கே நிரந்தரமாகி விட்டது...
அமைதியாக காட்சி தரும்
அதிகாலைப் பொழுது...
ஆழ் உறக்கத்தில் உலகமே
ஆழ்ந்து இளைப்பாற
ஆடவனே உன் பெண்ணின் மனம்
ஆசையாக தவிக்கிறது அன்பிற்கு..
அடையாளம் இல்லா அன்பு தான்..
அவசியமானது பெண்ணவளுக்கு...
ஆசைக்காக ஏங்கவில்லை ஆதரவிற்காக தவிக்கிறாள்...
அன்பு கொண்ட உன் நெஞ்சில்
அழுத்தமாக முகம் புதைத்திட்டால்
அனைத்தையும் எதிர் நீச்சலோடு
அழகாக கடந்திடுவாள்...
அன்பாய் அவளை அணைத்திடு
அன்பால் அவளை மீட்டிடு
இப்படிக்கு,
பெண்ணவளின் இதயம்
அமைதியாக காட்சி தரும்
அதிகாலைப் பொழுது...
ஆழ் உறக்கத்தில் உலகமே
ஆழ்ந்து இளைப்பாற
ஆடவனே உன் பெண்ணின் மனம்
ஆசையாக தவிக்கிறது அன்பிற்கு..
அடையாளம் இல்லா அன்பு தான்..
அவசியமானது பெண்ணவளுக்கு...
ஆசைக்காக ஏங்கவில்லை ஆதரவிற்காக தவிக்கிறாள்...
அன்பு கொண்ட உன் நெஞ்சில்
அழுத்தமாக முகம் புதைத்திட்டால்
அனைத்தையும் எதிர் நீச்சலோடு
அழகாக கடந்திடுவாள்...
அன்பாய் அவளை அணைத்திடு
அன்பால் அவளை மீட்டிடு
இப்படிக்கு,
பெண்ணவளின் இதயம்
மேலும்...
கருத்துகள்