எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

விடியும் நாள் எந்நாளென்று அறியாது நேற்று இன்று நாளை...

விடியும் நாள்


எந்நாளென்று அறியாது 
நேற்று இன்று நாளை என்று 
சொல்ல பழக்கிவிட்டது கொரோனா...

வாரத்தில் ஏழு நாளும் மறைந்து 
மாதத்தின் முப்பதும் கலைந்து 
மூன்று நாட்களை கொண்டே 
நகர்கிறது இக்காலம் .....

காமராசரை போலவோ 
கலாமை போலவோ 
வள்ளலாரைப் போலவே 
வள்ளுவரைப் போலவோ 
வாழ்ந்து காட்டாவிடினும் - உன் 
வழியில் சிறப்பாய் வாழ்ந்து விடு...

இவனைப் போல வாழ் என்று
இவ்வுலகம் சொல்லாவிடினும் 
இவனைப் போல வாழ்ந்து விடாதே என்று சொல்லாத அளவு வாழ்ந்திடு.... 

மற்றவருக்கு பயந்து வாழாதே 
மனசாட்சிக்கு பயந்து வாழ்ந்திடு... மரணத்திற்குப் பிறகும் - பலர் 
மனதில் வாழும் பாக்கியம் 
நீ பெற்றால் வாழ்க்கை வரலாறே....

பதிவு : Jeba
நாள் : 18-Sep-22, 8:14 pm

மேலே