K SIVAKUMAR - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : K SIVAKUMAR |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 24-Aug-2018 |
பார்த்தவர்கள் | : 23 |
புள்ளி | : 3 |
முயன்றிடடா! வென்றிடடா!
நதியென கடலென துணிவுடன் போரிட கற்றிடடா!
விதிதனை மதியுடன் அணுகிடக் கூடிடும் வெற்றியடா!
(நதியென)
எத்தனை சோதனை எத்தனை வேதனை எதிர்படினும்
எத்தனை ஊழ்வினை எத்தனை தீவினை படுத்திடினும்
நித்தமும் பீறிடும் நெஞ்சுரத் தால் இதை அகற்றிடணும்!
சத்திய பாதையில் வெற்றிகள் ஆயிரம் குவித்திடணும்!
(நதியென)
சிந்தனை மாறிட நிந்தனை கூறிடும் மனத்தவரும்
சந்ததம் போரிட சண்டையை ஏவிடும் குணத்தவரும்
உந்தனின் உயர்வினைக் கண்டிடும் போதினில் திருந்திடணும்!
வந்தனை கூறிட வந்திடும் வேளையில் வருந்திடணும்!
(நதியென)
இயற்கை
இயற்கையே!
இறைவன் படைப்பின் அதிசயமே!
இயந்திர வாழ்க்கையில்
இவ்வுலகில்
இன்னலுறும் மானிடரின்
இதயங்களுக்கு
இன்பம் தருகின்றாய்!
காடுகள் ,மலைகள்
கடலின் அலைகள்,.
பாடிடும் பறவைகள்,
பலவகை மிருகங்கள்,
வீழுகின்ற அருவிகள்,
ஓடிடும் நதிகள் என
உன் அவதாரங்களைக்
காண்போர் நெஞ்சங்களின்
கவலைகளுக்கு
மருந்துகளாக்குகின்றாய்!
அதிகாலை வானில்
ஆதவன் உதயமும்
அந்தி வானில்
சந்திரன் உதயமும்
நீல வான வீதியில்
நீந்தி செல்லும்
வெண் மேகங்களும்
காணுகின்ற நெஞ்சங்களில்
தோணுகின்ற ஆனந்தத்திற்கு அளவுண்டோ?
அமைதியாய் இருக்கும் போது
எங்களை
ஆனந்தப்
படுத்துகின்றாய்.
பொங்கி வெடிக்கும்
அகிம்சை புரட்சிக்கு வித்திட்டு
உப்பு சத்தியாக்கிரகத்தாலும்
ஒத்துழையாமை இயக்கத்தாலும்
தப்பு செய்தவனைத் தடுமாற வைத்து
எளிமைக்கு இலக்கணம் வகுத்து
ஏழ்மைக்கு புதுப்பொலிவு கொடுத்து
வலிமைக்கு சவால் விட்டு
அப்போது காந்தியம் சாதித்தது
ஆங்கிலேயர் ஆட்சி மாற்றம்
இப்போதொரு காந்தியம் சாதித்தது
இங்கொரு ஜல்லிக்கட்டில் வெற்றி!
இப்போதைய இளைஞர்களின் பங்களிப்பே
இத்தகைய வெற்றிக்குச் சாத்தியமெனில்
"எப்போதும் காந்தியம் வெல்லும் இனி"
என்றொரு நம்பிக்கைப் பிறக்கின்றது!
அகிம்சை புரட்சிக்கு வித்திட்டு
உப்பு சத்தியாக்கிரகத்தாலும்
ஒத்துழையாமை இயக்கத்தாலும்
தப்பு செய்தவனைத் தடுமாற வைத்து
எளிமைக்கு இலக்கணம் வகுத்து
ஏழ்மைக்கு புதுப்பொலிவு கொடுத்து
வலிமைக்கு சவால் விட்டு
அப்போது காந்தியம் சாதித்தது
ஆங்கிலேயர் ஆட்சி மாற்றம்
இப்போதொரு காந்தியம் சாதித்தது
இங்கொரு ஜல்லிக்கட்டில் வெற்றி!
இப்போதைய இளைஞர்களின் பங்களிப்பே
இத்தகைய வெற்றிக்குச் சாத்தியமெனில்
"எப்போதும் காந்தியம் வெல்லும் இனி"
என்றொரு நம்பிக்கைப் பிறக்கின்றது!