செண்பகவள்ளியின் மகன் மணிகண்டன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  செண்பகவள்ளியின் மகன் மணிகண்டன்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  09-Jun-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  12-Apr-2017
பார்த்தவர்கள்:  69
புள்ளி:  2

என்னைப் பற்றி...

விதியோடு பாதியும் மதியோடு மீதியும் வாழும் மனிதன்...

என் படைப்புகள்
செண்பகவள்ளியின் மகன் மணிகண்டன் செய்திகள்

மனமே!
நீ ஏங்காதே!!
எதுவும் இங்கே யாருக்கும் நிரந்தரமுமில்லை
எல்லாம் நமக்கு இங்கே சொந்தமுமில்லை
நடக்கும் பாதை நமக்கு உரிமையுமில்லை
பார்க்கும் காட்சி நம் சொத்துமில்லை
பரிதவிப்புகள் எல்லாம் பாசமுமில்லை
காணும் கனவுகள் நினைவில் நிற்பதுமில்லை…

மனமே!
நீ ஏங்காதே!!
காலத்தின் கட்டாயங்கள் காயங்களில்லை
ஆறும் நேற்றைய இரணங்கள் யாவும் இன்றே
வதங்கி வாடாதே கண்ணீரை வழிய விடாதே
வாழ்க்கை என்றும் அவ்வளவு கடினமில்லை
வழிகள் எங்கும் முட்கள் மட்டுமேயில்லை
வலிகள் ஒன்றும் கொடூரமானவை இல்லை
வாழ்க்கை வலிகளை மட்டுமே தருவதுமில்லை…

மனமே!
நீ ஏங்காதே!!
மழையின்றி நீயும் வறண்டு போகாதே
மழை நீரில் கண்ணீரை தி

மேலும்

அன்னப்பறவை வார்த்தை தேடி அலையுதடி
பால் வண்ணப் பறவையே உந்தன் பாதத்தில்...!
ஆணின் மனதை குடித்து தீர்க்கும்
ஆணவக் கிளியே அப்படியே நில்லேன்...!
கொஞ்சல் மொழிகளை உதிர்த்துப்போ
கோர்த்து நான் மஞ்சள் மாலை செய்கிறேன்...!
கொஞ்சம் நானும் அகமகிழ்கிறேன்
ஆனந்தத்தில் திக்கித் திளைக்கிறேன்...!
தேடுதலற்று தேங்கி நிற்கிறேன் நான்
தேவதை உன் பிம்பத்தில் பார்வையை அகற்றாமல்...!
வெள்ளை வண்ணமற்ற காகிதத்தில்
பல வண்ணமாக வந்து நிரப்பமாட்டாயா...!
தயக்கமேன் தடாகமென்ன உனக்கு தடையா
தாமரையே தாண்டி வா தடாகத்தின் கரையை மீறி ...!
மெள்ளப் பதித்துப்போ உன் மென் பாதச்சுவடுகளை
சொல்லிப்போ மெல்லிய வார்த்தைகள் சிலவற்றை...!

மேலும்

முடிவிலி    

படகு ஒன்றில்
பயணிப்போம்
இருவர் மட்டும்
நீயின்றி நானில்லை
நானின்றி நீயில்லை
வாக்குறுதிகளோடு
படகின் அம்முனையில் நீ
படகின் இம்முனையில் நான்
இருவரும் பிரிந்து தொலைவில்
இல்லையேல்
இருவரும் ஒன்றாக நடுவில்
இணைந்தே
இருந்தால் இருப்போம் இறக்காமல்
பிரிந்தும்
இருந்தால் இருப்போம் இறக்காமல்
அந்தப் பக்கம் இருவரும் சென்றாலும்
இந்தப் பக்கம் இருவரும் சென்றாலும்
படகு கவிழும்
உயிரும் பிரியும்
உறவும் முறியும்
நீரற்ற பாதையில் படகு செல்லாது
நீயற்ற பாதையில் நான் செல்லமாட்டேன்
படகு என்பது வாழ்க்கை
நீரென்பது அன்பு
நீயாக நீயிருந்து
நானாக நானிருந்து
நாமாக நாமிருந்து
இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து
புரிந்ததால் சுயத்தை தொலைத்து
பிடிக்காதவற்றை ஏற்று
பிடித்தவற்றை தொலைத்து
உனக்குப் பிடித்ததை எனக்காகவும்
எனக்குப் பிடித்ததை உனக்காகவும்
விட்டுக்கொடுப்போம்
விருப்பங்களை தொலைப்போம்
ஒன்றாக வாழ்வோம்
மனம் ஒன்றாதவைகளோடு
மனதை பழக்குவோம்
பழக்கம் நடைமுறையாகிவிடும்
நீயும் நானும் இருப்போம்
நீயாக நானாக தனித்து
நாம் தொலைந்திருப்போம்
முடிவுக்காக காத்திருப்போம்
ஏதாவது ஒன்றினால் பிணைக்கப்பட்டு
முடிவையும் தொலைத்திருப்போம்
இணைந்திருப்போம் பிரிந்தேயிருப்போம்
பிரியவுமுடியாமல் பிரியமுமில்லாமல்
எங்கே தொலைந்தோமென்பது
தெரியாமல் படகும் கவிழ்ந்தது அறியாமல்
நீரற்ற பாதையில் பயணிப்போம்
நீயற்ற பாதையில் பயணிப்பேன்
நம் வாக்குறுதிகளை எங்கே தொலைத்தோம்
எங்கே நாம் காணாமல் போனோம்
எப்போது நான் நீ என்ற வேறானோம்
நினைத்துப்பார்…

துளி நீர் வழிந்ததா விழிகளிலிருந்து…

எனக்கும்தான்…

நாம் நாம்தான்…

முடிவிலி  

மேலும்

யாருமே கண்டுகொள்ளாத நான்…


அந்தி மாலை
மங்கும் வேளை
பொங்கும் மேகங்கள்
அங்கும் இங்கும் மனிதர்கள்
திசையெங்கும் பறவைகள்
செங்கதிர் மலையை நெருங்கும் நேரம்
மாலை நேரத்து காற்று கூடும் காலம்
மஞ்சள் சேலை அஞ்சன விழியாள்
கொஞ்சும் மொழியாள் மிஞ்சும் அழகால்
கொள்ளை கொள்ள எல்லையின்றி
பொருந்த உடுத்தி அழகை அணிந்து
அடிகளெடுத்து மெள்ள மெள்ள 
புவிக்கு நோகா வண்ணம் 
பூம்பாதம் எடுத்து வைத்து நடந்துவருகின்றாள்
சேலை மடிப்புகள் கலையாமல் 
கால்களை மறைக்க போராடும் காற்று
கால்கள் தெரியும்போது எட்டிப்பார்க்கும் 
குட்டிப் பூச்சிகள் ஓடி மறையும் வண்டுகள்
மரக்கிளைகளில் உட்க்கார்ந்து பேசும் பறவைகள்
உறைந்துபோன இதயங்கள்
உடைந்துபோன மனங்கள்
ஒட்டிக்கொண்டு விட்டுப்பிரிய மனமில்லா
மணற்த் துகள்கள் அவள் பாதங்களின் ஓரங்களில்
அவள் கண்பட்டு காணாமல் போக
மறுக்கும் காட்சிகள் வண்ணமிகு எண்ணங்கள்
ஒளிமிகு வண்ணங்கள்
ரீங்காரம் செய்யும் சில்வண்டுகள்
அலைகளினூடே நடனமாடும் நண்டுகள்
அலைகள் ஓயாமல் துடிக்கின்றது
கரைதாண்டி அவளிரு விழிகளை 
காண கண்ணில் பேர் ஆவலோடு
கரை ஓயாமல் அலையைத் திருப்பி அனுப்ப
அவள் போகும் திசையைப் பார்த்தே 
கரைவது கூட தெரியாமல் கரை இருக்க
மலைகளின் கொஞ்சலில் தாளாத வானம்
கொஞ்சம் அதிகமாகவே வெட்கத்தில் சிவக்க
செவ்வொளி பட்டு நீல நிறக் கடல்நீர்
செங்குழம்பாய் மாற அதை எடுத்து
அள்ளி ஊற்றிக்கொண்டு கரை நோக்கி
பாயும் மரக்கலங்கள் கடலன்னை மடியில்
தவழ்ந்து தவழ்ந்து தன்னிலை மறந்து
ஓடி ஆடி மறையும் கடல் அலைகள்
மீண்டு வந்து கரைக்கடக்க துடிக்கும் அலை 
அதை பிடிக்க ஓடும் மழலை பூங்கரங்கள்
பட்டதும் ஒட்டிப்பிரியும் உப்புத்தண்ணீர்
ஆங்காங்கே எதிர்காலத்தில் வாழும் 
நிரந்தரமில்லா நிகழ்கால காதலர்கள்
அங்குமிங்கும் வாழும் கணவன் மனைவி
அலைகள் வந்து ஆதரவு தரும் தனி மனிதர்கள்.
.
.
.
.
யாருமே கண்டுகொள்ளாத நான்...

    -  வள்ளி மகன் மணிகண்டன்  

மேலும்

முடிவிலி    

படகு ஒன்றில்
பயணிப்போம்
இருவர் மட்டும்
நீயின்றி நானில்லை
நானின்றி நீயில்லை
வாக்குறுதிகளோடு
படகின் அம்முனையில் நீ
படகின் இம்முனையில் நான்
இருவரும் பிரிந்து தொலைவில்
இல்லையேல்
இருவரும் ஒன்றாக நடுவில்
இணைந்தே
இருந்தால் இருப்போம் இறக்காமல்
பிரிந்தும்
இருந்தால் இருப்போம் இறக்காமல்
அந்தப் பக்கம் இருவரும் சென்றாலும்
இந்தப் பக்கம் இருவரும் சென்றாலும்
படகு கவிழும்
உயிரும் பிரியும்
உறவும் முறியும்
நீரற்ற பாதையில் படகு செல்லாது
நீயற்ற பாதையில் நான் செல்லமாட்டேன்
படகு என்பது வாழ்க்கை
நீரென்பது அன்பு
நீயாக நீயிருந்து
நானாக நானிருந்து
நாமாக நாமிருந்து
இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து
புரிந்ததால் சுயத்தை தொலைத்து
பிடிக்காதவற்றை ஏற்று
பிடித்தவற்றை தொலைத்து
உனக்குப் பிடித்ததை எனக்காகவும்
எனக்குப் பிடித்ததை உனக்காகவும்
விட்டுக்கொடுப்போம்
விருப்பங்களை தொலைப்போம்
ஒன்றாக வாழ்வோம்
மனம் ஒன்றாதவைகளோடு
மனதை பழக்குவோம்
பழக்கம் நடைமுறையாகிவிடும்
நீயும் நானும் இருப்போம்
நீயாக நானாக தனித்து
நாம் தொலைந்திருப்போம்
முடிவுக்காக காத்திருப்போம்
ஏதாவது ஒன்றினால் பிணைக்கப்பட்டு
முடிவையும் தொலைத்திருப்போம்
இணைந்திருப்போம் பிரிந்தேயிருப்போம்
பிரியவுமுடியாமல் பிரியமுமில்லாமல்
எங்கே தொலைந்தோமென்பது
தெரியாமல் படகும் கவிழ்ந்தது அறியாமல்
நீரற்ற பாதையில் பயணிப்போம்
நீயற்ற பாதையில் பயணிப்பேன்
நம் வாக்குறுதிகளை எங்கே தொலைத்தோம்
எங்கே நாம் காணாமல் போனோம்
எப்போது நான் நீ என்ற வேறானோம்
நினைத்துப்பார்…

துளி நீர் வழிந்ததா விழிகளிலிருந்து…

எனக்கும்தான்…

நாம் நாம்தான்…

முடிவிலி  

மேலும்

அன்னப்பறவை வார்த்தை தேடி அலையுதடி
பால் வண்ணப் பறவையே உந்தன் பாதத்தில்...!
ஆணின் மனதை குடித்து தீர்க்கும்
ஆணவக் கிளியே அப்படியே நில்லேன்...!
கொஞ்சல் மொழிகளை உதிர்த்துப்போ
கோர்த்து நான் மஞ்சள் மாலை செய்கிறேன்...!
கொஞ்சம் நானும் அகமகிழ்கிறேன்
ஆனந்தத்தில் திக்கித் திளைக்கிறேன்...!
தேடுதலற்று தேங்கி நிற்கிறேன் நான்
தேவதை உன் பிம்பத்தில் பார்வையை அகற்றாமல்...!
வெள்ளை வண்ணமற்ற காகிதத்தில்
பல வண்ணமாக வந்து நிரப்பமாட்டாயா...!
தயக்கமேன் தடாகமென்ன உனக்கு தடையா
தாமரையே தாண்டி வா தடாகத்தின் கரையை மீறி ...!
மெள்ளப் பதித்துப்போ உன் மென் பாதச்சுவடுகளை
சொல்லிப்போ மெல்லிய வார்த்தைகள் சிலவற்றை...!

மேலும்

மனமே!
நீ ஏங்காதே!!
எதுவும் இங்கே யாருக்கும் நிரந்தரமுமில்லை
எல்லாம் நமக்கு இங்கே சொந்தமுமில்லை
நடக்கும் பாதை நமக்கு உரிமையுமில்லை
பார்க்கும் காட்சி நம் சொத்துமில்லை
பரிதவிப்புகள் எல்லாம் பாசமுமில்லை
காணும் கனவுகள் நினைவில் நிற்பதுமில்லை…

மனமே!
நீ ஏங்காதே!!
காலத்தின் கட்டாயங்கள் காயங்களில்லை
ஆறும் நேற்றைய இரணங்கள் யாவும் இன்றே
வதங்கி வாடாதே கண்ணீரை வழிய விடாதே
வாழ்க்கை என்றும் அவ்வளவு கடினமில்லை
வழிகள் எங்கும் முட்கள் மட்டுமேயில்லை
வலிகள் ஒன்றும் கொடூரமானவை இல்லை
வாழ்க்கை வலிகளை மட்டுமே தருவதுமில்லை…

மனமே!
நீ ஏங்காதே!!
மழையின்றி நீயும் வறண்டு போகாதே
மழை நீரில் கண்ணீரை தி

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே