Mandhagini - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Mandhagini
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  20-May-2021
பார்த்தவர்கள்:  42
புள்ளி:  5

என் படைப்புகள்
Mandhagini செய்திகள்
Mandhagini - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jun-2021 4:09 pm

சுற்றமும் நட்பும் மறந்த
எனை நீமட்டும் தேடிப்பிடித்தாயே!!!

மிதிவண்டியை எனக்காக மிதித்தாய்...
பாவடை கொக்கியும் கண்கோணாமல் சீர்செய்தாய்...
புத்தக சுமைகளை எனக்காக சுமந்தாய்...
இன்றுவரை என் மனச்சுமை களை...

கல்லா மண்ணா விளையாடிய திண்ணைகள் உன் நினைவூட்டுகிறது!!!

ஊரடங்கு வந்த போதும் உனை மீட்டு செல்வேன் என்றாய் அதனால்தான் ஊருக்கே ராஜாவா??

காரணம் சொல்லாமல் கலைந்து போக இது கனவும் அல்ல ....

காரணம் சொல்லி கலைந்து போக இது காதலும் அல்ல ...

கடைசி வரைக்கும் வரும் உண்மையான நட்பு இது ...

மேலும்

Mandhagini - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jun-2021 4:05 pm

உன் காதலோடு வாழும் போது காற்றில்லாத தேசத்திலும் நான் மட்டும் கனவோடு!!!

விரல் தொடும் தூரத்தில் காதலிக்க பாக்கியமில்லை...
தொலைக்காமல் வைத்துள்ளேன் உன் தொடுதலை...

என் கூந்தல் களை(ல)ந்து கூறிய ரகசியங்கள்..
காதல் கலந்த பாஷைகள்...
காத்திருக்கின்றன உன் காதருகில்...

முத்தங்களை முகிலாக்கி மிதக்கவிட்டேன்...
உன் பிறந்தநாளில் மழையாகி சேர...

காதல் கண்ணாளா!!!
என் கண்ணுக்குள் ஒளிந்த உன்னை தவறவிடாமல்...
இமைமுட மறுக்கும்

உன் கனவு காதலி

மேலும்

Mandhagini - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jun-2021 8:05 pm

இனியவளே!!!

பூவினம் சேராத பூ...
வானோடு சேராத நிலவு....
மண்ணோடு ேசராத மழை...
கண்டேன் நீ என்று...

என் கண்ணீருக்கு ஆறுதலாக....
என் சிரிப்பு உன் மகிழ்ச்சியாக...
என் வீழ்ச்சிக்கு ஏணியாக...
என் தோல்விகளுக்கு அன்னையாக....
வழி தவறுகையில் ஆசானாக...

உன் அகம் புரிந்த நட்புக்கு தலைவணங்குகிறேன்...

என் கைப்பேசி தானே அழைக்கும் எண்கள் உன்னுடையது....
நம் வெட்டிப் பேச்சுக்கும் உயிர் கொடுத்து நகைத்தவளே...
நட்புக் கே நீதான் நகை....

தொலைவில் இருந்தும் நான் தொலையும் தருணம் எனை மீட்டெடுத்தாய்!!!
கணவனே பொறாமைப்படும் நட்பைத் தந்தாய்...

என் காதல் தோழியே!!

இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்❤️❤

மேலும்

Mandhagini - படைப்பு (public) அளித்துள்ளார்
21-May-2021 9:48 pm

உயர்ந்தவனே!

அன்று என்னை நிமிர்த்தியது உன் உயரம் ...
இன்றுவரை என்னை உயரத்தில் வைத்து!!!

வரையப்படாத ஓவியத்தின்
வண்ணங்களாய் சிதறிக் கிடந்தேன்
நான்..!
அழகிய ஓவியமாக எனை மாற்றினாய்!!!

என் கோபங்கள் உன் பார்வை முன் மட்டும்
சிரிப்பாக மாறும் மாயமென்ன??

மேற்படிப்பு படி என்றாய்...
உனக்கு பிடித்தது பிடிக்காதது மட்டுமே நான் படித்த மேற்படிப்பு...

உனக்கு மட்டுமல்ல உன் உறவுகளுக்கும் நான் முக்கியமென முன்நிறுத்தினாய்...

காதலியாகி மனைவியானேன்...
இன்றுவரை உன் மூத்தமகள் போல் எனைத் தாங்கியதற்கு நன்றி!!!

இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்❤️

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே