காதல் தோழி

இனியவளே!!!

பூவினம் சேராத பூ...
வானோடு சேராத நிலவு....
மண்ணோடு ேசராத மழை...
கண்டேன் நீ என்று...

என் கண்ணீருக்கு ஆறுதலாக....
என் சிரிப்பு உன் மகிழ்ச்சியாக...
என் வீழ்ச்சிக்கு ஏணியாக...
என் தோல்விகளுக்கு அன்னையாக....
வழி தவறுகையில் ஆசானாக...

உன் அகம் புரிந்த நட்புக்கு தலைவணங்குகிறேன்...

என் கைப்பேசி தானே அழைக்கும் எண்கள் உன்னுடையது....
நம் வெட்டிப் பேச்சுக்கும் உயிர் கொடுத்து நகைத்தவளே...
நட்புக் கே நீதான் நகை....

தொலைவில் இருந்தும் நான் தொலையும் தருணம் எனை மீட்டெடுத்தாய்!!!
கணவனே பொறாமைப்படும் நட்பைத் தந்தாய்...

என் காதல் தோழியே!!

இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்❤️❤️❤️❤️

எழுதியவர் : மந்தாகினி (12-Jun-21, 8:05 pm)
சேர்த்தது : Mandhagini
Tanglish : kaadhal thozhi
பார்வை : 251

மேலே