பாண்டியன் குவேரா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : பாண்டியன் குவேரா |
இடம் | : சென்னை. |
பிறந்த தேதி | : 06-Dec-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Aug-2016 |
பார்த்தவர்கள் | : 48 |
புள்ளி | : 3 |
அசாத்தியங்களை கனவு காணும் யதார்த்தவாதி.
கரீமின் பிரியாணி
திருவல்லிக்கேணியின் நெரிசல் மிகுந்த பஜார் ரோட்டின் நடுவே, இருக்கிறதென்றே தெரியாமல் இருக்கும் அந்த சந்தின், 12-ஆம் நம்பர் ஓட்டு வீடுதான், இப்போது கரீம் பாயின் வீடு. நாகப்பட்டினத்தில் இருந்து இரண்டு தலைமுறைகளுக்கு முன்னர் இங்க வந்த குடும்பம் அவர்களுடையது. வயதோ இப்போது 55-ஐ நெருங்கி விட்டது. காதோர முடியும் நரைக்க தொடங்கிவிட்டன. கைகளும் கூட இப்போதெல்லாம் ரொம்பவே நடுங்குகிறது. ''கரீம் பாய் பண்ணாதான், அது பிரியாணி..'' என கல்யாணத்திற்கு வந்தவர்களில் யாரேனும் இதை கண்டிப்பாக சொல்லிவிடுவார்கள். ''அட, ஒரு தேக்சாவை ஒத்த ஆளா தூக்கி ஏத்துவாப்ல..'' என பாய்மார்கள் பேசி கொள்வார்களாம். எல்லா
ஒரு கதறல்
வெட்டப்பட்ட மரம் போல
வேசப் பொண்ணு நானிருக்க
விவரமேதும் தெரிஞ்சிருந்தா
வேற வழி பாத்திருப்பேன்.
பெத்தவனும் இருந்திருந்தா
மத்தவங்க போல நானும்
புத்தகத்த படிப்பதற்கு
புறப்பட்டு போயிருப்பேன்.
வித்துப்புட்டு போகையில
செத்தும் கூட போயிருப்பேன்
புத்தம் புது வாழ்வுக்காக
எத்தன நாள் காத்திருப்பேன்.
என்னப் போல புள்ளைங்கெல்லாம்
கல்வி பயில போகையில
எரியும் விளக்கு அனைக்கப்பட்டு
கலவி கற்று நானிருக்கேன்.
முதுகின் மேல தழும்புகளும்
முலையின் மீது காயங்களும்
மெடலப் போல வாங்கிக்கிட்டு
மெத்த மேல பினம் போல
செத்து நானும் கெடக்குறனே….
அவர்கள் நான்கு சிறுவர்கள்
நால்வர் கைகளிலும் சாக்கு பைகள்
கேட்டு பெற்றதில்லை இப்பைகளை அவர்கள்
கேட்தாரற்று கிடக்கும் குப்பைகள் அவர்கள்
தெரு தெருவாய் சுற்றி திரிகிறார்கள்
தேடி பொருக்கி பைகளை நிரப்ப
மதுபாட்டில்களால் தன் பையை நிரப்புகிறான் ஒருவன்
மற்றொருவனோ மக்காத குப்பைகளை தேடி பொருக்குகிறான்
மூன்றாமவனோ கண்ணில் பட்டதை கவர்ந்து செல்ல
கடைசி ஒருவன் மட்டும் காகித தாள்களை தேடி திரிகிறான்
ஏடுகளை வாசிக்கும் ஏக்கம் அவனிடத்தில்- தன்
கணவின் எழுத்துக்களை காணா கவலை அவனிடத்தில்
அப்பைகளை சுமக்கும் அவன் கைகளும்
பாடங்களை சுமக்கும் அப்பைகளும்
பள்ளியறை நுழைந்திடுவதே இல்லை - மாறாக
பழைய பேப்பர் கடைகள