சுமக்கும் பைகள்

அவர்கள் நான்கு சிறுவர்கள்
நால்வர் கைகளிலும் சாக்கு பைகள்
கேட்டு பெற்றதில்லை இப்பைகளை அவர்கள்
கேட்தாரற்று கிடக்கும் குப்பைகள் அவர்கள்
தெரு தெருவாய் சுற்றி திரிகிறார்கள்
தேடி பொருக்கி பைகளை நிரப்ப
மதுபாட்டில்களால் தன் பையை நிரப்புகிறான் ஒருவன்
மற்றொருவனோ மக்காத குப்பைகளை தேடி பொருக்குகிறான்
மூன்றாமவனோ கண்ணில் பட்டதை கவர்ந்து செல்ல
கடைசி ஒருவன் மட்டும் காகித தாள்களை தேடி திரிகிறான்
ஏடுகளை வாசிக்கும் ஏக்கம் அவனிடத்தில்- தன்
கணவின் எழுத்துக்களை காணா கவலை அவனிடத்தில்
அப்பைகளை சுமக்கும் அவன் கைகளும்
பாடங்களை சுமக்கும் அப்பைகளும்
பள்ளியறை நுழைந்திடுவதே இல்லை - மாறாக
பழைய பேப்பர் கடைகளில் அவன்
பசிக்கு பணமாய் பின் உணவாய் மாறிப்போகிறது.

எழுதியவர் : பாண்டியன் சே (23-Aug-16, 9:19 am)
சேர்த்தது : பாண்டியன் குவேரா
பார்வை : 58

மேலே