கதறல்
ஒரு கதறல்
வெட்டப்பட்ட மரம் போல
வேசப் பொண்ணு நானிருக்க
விவரமேதும் தெரிஞ்சிருந்தா
வேற வழி பாத்திருப்பேன்.
பெத்தவனும் இருந்திருந்தா
மத்தவங்க போல நானும்
புத்தகத்த படிப்பதற்கு
புறப்பட்டு போயிருப்பேன்.
வித்துப்புட்டு போகையில
செத்தும் கூட போயிருப்பேன்
புத்தம் புது வாழ்வுக்காக
எத்தன நாள் காத்திருப்பேன்.
என்னப் போல புள்ளைங்கெல்லாம்
கல்வி பயில போகையில
எரியும் விளக்கு அனைக்கப்பட்டு
கலவி கற்று நானிருக்கேன்.
முதுகின் மேல தழும்புகளும்
முலையின் மீது காயங்களும்
மெடலப் போல வாங்கிக்கிட்டு
மெத்த மேல பினம் போல
செத்து நானும் கெடக்குறனே….