PraveenKumar R - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : PraveenKumar R |
இடம் | : Salem |
பிறந்த தேதி | : 05-Sep-1986 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 21-Jun-2020 |
பார்த்தவர்கள் | : 69 |
புள்ளி | : 7 |
தமிழை சுவாசிக்கும் சாதாரணண்.
இதோ...
அவள் தீயவள் ஆகிறாள்...
பெண்ணின் வயிற்றில்
பெண்ணாய் பிறந்தவளை
பெண்ணின் வயிற்றில்
ஆணாய் பிறந்தவன்
இழிவாய் பழிக்கப்படுகிறாள்...
தெளிவில்லா தூய்மையை
தெளிந்து புரிந்துகொள்ள
முயற்சி செய்யாமல்
தெரிந்த அழுக்குகளை
தெளிவில்லாமல் கண்டு
தூய்மையை அழுக்காக்குகிறான்...
ஆண் வடிக்கும்
சிற்பமே சிற்பம் -
பெண் வடிப்பதெல்லாம்
கிறுக்கல்கள், கிளிஞ்சல்கள்
என்றெண்ணும் ஆணிணமே -
திறமைகள் இனம் பார்ப்பதில்லை...
ஆணிணமே...
போட்டியிடு, போராடு -
நீ தோர்த்துவிட்டால்
பாராட்டி வழிவிடு -
பெண்ணாக இருந்தாலும்...
கவிஞர்கள் என்றால்
ஆண்கள் மட்டுமல்ல -
வெற்றியாளர்கள் என்றால்
ஆண்கள
வணக்க்கம் விடியலே...
உன்னுடன் நானும்
தனிமையின் தோழியாய்
உடன்வர உருவாக்கப்பட்டவள்...
விருப்போ, வெறுப்போ
நன்மையோ, தீமையோ
உன் நிலைமையின்
மறு பிரதியாய்
நானும் பயணிக்கிறேன்...
மாற்று பாலினம்
தந்த தொல்லைகள்- நான்
எதிர்பார்த்த கேள்விகள்...
என் பாலினமே
தந்த தொல்லைகள்- நான்
எதிர்பாரா தோல்விகள்...
கலவரமாய் பூத்த
முதல் நாள்
அலுவலக பணியில்
என்னை உரசா தோழர்களும்
என்னை சீண்டிய தோழிகளுமே
என் முதல் ஆச்சர்யங்கள்...
மாறிய சமூகத்தின்
முதல் குறியீட்டை
இந்நாளில் கண்டேன்...
ஆனாலும்
மாறாத பேருந்து உரசல்கள்
மாற்றானின் கண் கற்பழிப்புகள்
என்னை ஈர்க்காத காதலனின்
கோமாளி அழி
விடியும் பொழுதில்
உறக்கம் கலைந்தேன்...
பொன்வானம் மினுமினுப்பை
பலமணி நேரம் ரசித்து
விடியலும் சலித்துவிட,
வெட்டியாய் ஓர்நடை...
முகக்கவசம் அணிந்தே
முப்பொழுதும் கழிந்த நாட்களில்
முகக்கவசம் அணியா
விடுதலை பயணம்
இன்றே தொடங்கினேன்...
தெருவெல்லாம் வெறித்துக் கிடக்க
வாகனப் புகையினில்
வீதிஉலா நகர்ந்தேன்...
அதிகாலை காற்று
அழகாய் உரசிட
தெருக்களின் விஜயம்
இனிமையாய் உணர்ந்தேன்...
தேநீர் கடைகளில்
சிலமனிதர்கள் படர்ந்திருக்க
அவர்களோடு ஒன்றினேன்
தேநீர் அருந்தினேன்...
பல தெருக்களை கடந்தேன்,
சில தேநீர் கடைகளை கடந்தேன்,
மக்கள் குவியும்
பொதுச்சந்தையை கடந்தேன்,
நேரம் கரைந்த நேரத்
கவிதை -
சொற்களின் அழகிய வித்தை...
மொழியின் அழகிய நடனம்...
சொற்கள் மொழியில் பதிக்கும் அழகிய முத்தம்...
கவிஞனை பிரம்மனாக்கும் விந்தை...
புனைந்தவனின் ஞான ஓசை...
படிப்பவனை சில்லிட செய்யும் தீ...
மொழியை பேரழகாக்கும் பரிணாமம்.
மொழிகளின் உல்லாச பயணம்...
மொழிகளின் சொர்கம்...
சொற்களின் வானவில்...
மொழி கடலின் முத்து...
மொழி வாணின் நட்சத்திரம்...
ஆதி மொழியின்
அந்தமில்லா ஆனந்தம்...
குறிப்பு: கொரோனா ஊறடங்கில்,
தினக்கூலியின் வேதனை.
வீதிஉலா கசந்து
இரவின் நிழலில்
இறுக்கமாய் ஒரு படுக்கை...
கடனின் கடைசி துளியும்
வட்டியாய் நட்பை
விற்று செல்ல
வெறும் வயிற்றை
பாயாய் விரித்து
ருசியாய் கனவு தின்ன
கண்மூடி தவம் இருந்தேன்...
நாளை
கொரோனா தொற்றின்
சாயல் வேண்டி
இன்றே
எனக்கு குழிபரித்தேன்...
இரவின் தூறல்
என்னை உலுக்கியே
நாளைய உயிர் இருக்க
வழி கேட்டது...
தூரத்து நண்பனின்
விட்டை தேடியே
உள்ளச்சிறகு விரிந்தது...
பிச்சை கேட்க
மனம் மறுத்தாலும்
வயிற்றின் பசிபாடல்
கேட்டிடுமோ பிறர்க்கு
என மனம் கசந்தது...
என் இருதியாத்திறை
இன்றே நடந்தால்
இப்பொழுதே சிர