கொரோனா வறுமை
குறிப்பு: கொரோனா ஊறடங்கில்,
தினக்கூலியின் வேதனை.
வீதிஉலா கசந்து
இரவின் நிழலில்
இறுக்கமாய் ஒரு படுக்கை...
கடனின் கடைசி துளியும்
வட்டியாய் நட்பை
விற்று செல்ல
வெறும் வயிற்றை
பாயாய் விரித்து
ருசியாய் கனவு தின்ன
கண்மூடி தவம் இருந்தேன்...
நாளை
கொரோனா தொற்றின்
சாயல் வேண்டி
இன்றே
எனக்கு குழிபரித்தேன்...
இரவின் தூறல்
என்னை உலுக்கியே
நாளைய உயிர் இருக்க
வழி கேட்டது...
தூரத்து நண்பனின்
விட்டை தேடியே
உள்ளச்சிறகு விரிந்தது...
பிச்சை கேட்க
மனம் மறுத்தாலும்
வயிற்றின் பசிபாடல்
கேட்டிடுமோ பிறர்க்கு
என மனம் கசந்தது...
என் இருதியாத்திறை
இன்றே நடந்தால்
இப்பொழுதே சிரித்திருப்பேன்...
நாளைய விடியலில்
என் கண்
மீண்டும் திறந்தால்
என் கண்ணீர் பன்னீர் தூவி
நாளையும் நரகம்
என் உடம்பில் வளர்பேன்...
நாளைய இரவும்
இதேகடை விரிப்பேன் -
பதில்சொல் அல்லது உயிற்கொல்
கொரோனா ஊரடங்கே???!!!
குறிப்பு: கொரோனா ஊறடங்கில்,
தினக்கூலியின் வேதனை.