கவியசரனுக்கு பிறந்தநாள்

*******************
கவியரசனுக்கு இன்று பிறந்தநாள்
புவியில் பூத்த புதுமைக்கு பிறந்தநாள் !
எண்ணங்களில் வாழும் கண்ணதாசா
ஈடேது இணையேது இன்றும் உனக்கு !
தத்துவப் பாடல்களின் தலைவனே
தமிழரின் நெஞ்சில் நிலைத்தவனே !
வாழ்வின் படிகளைப் பார்த்தவனே
வடிவமாய் அதனை வார்த்தவனே !
மரணம் எனக்கில்லை என்றவனே
மக்கள் மனதில் என்றும் வாழ்பவனே !
காதலைக் கவிதையில் காட்டியவனே
கவிதையில் புகழ்கொடி நாட்டியவனே !
கவிதைகளால் இதயத்தைத் தொட்டவனே
கவிஞர்கள் பலர் தோன்றிட வித்திட்டவனே !
மதங்களைக் கடந்த கவிஞர் மாமணியே
மனங்களில் நிலைத்த மாமனிதனே !
உன்னை நினைத்து உதிரம் கசியுது
உயிராய் உள்ளவரை உள்ளம் மறவாது !
இறுதித் தமிழனும் ரசிப்பான் உன்பாடல்களை
குருதியில் கலந்த உந்தன் வார்த்தைகளை !
எழுதியது நீ எல்லாம் பாடல்கள் அல்ல
என்றும் எவருக்கும் அத்தனையும் பாடங்களே !
தலைமுறை கடந்தும்
தரணியில் வாழ்பவனே
தமிழர்கள் போற்றும்
தலைமைக் கவிஞனே !
வாழ்வியல் தத்துவத்தை
வரிகளில் காட்டியவனே
வாழும்வரை வணங்கும்
தமிழுலகம் இறுதிவரை !
பழனி குமார்