கொரோனா வரவேற்பு

விடியும் பொழுதில்
உறக்கம் கலைந்தேன்...

பொன்வானம் மினுமினுப்பை
பலமணி நேரம் ரசித்து
விடியலும் சலித்துவிட,
வெட்டியாய் ஓர்நடை...

முகக்கவசம் அணிந்தே
முப்பொழுதும் கழிந்த நாட்களில்
முகக்கவசம் அணியா
விடுதலை பயணம்
இன்றே தொடங்கினேன்...

தெருவெல்லாம் வெறித்துக் கிடக்க
வாகனப் புகையினில்
வீதிஉலா நகர்ந்தேன்...

அதிகாலை காற்று
அழகாய் உரசிட
தெருக்களின் விஜயம்
இனிமையாய் உணர்ந்தேன்...

தேநீர் கடைகளில்
சிலமனிதர்கள் படர்ந்திருக்க
அவர்களோடு ஒன்றினேன்
தேநீர் அருந்தினேன்...

பல தெருக்களை கடந்தேன்,
சில தேநீர் கடைகளை கடந்தேன்,
மக்கள் குவியும்
பொதுச்சந்தையை கடந்தேன்,
நேரம் கரைந்த நேரத்தில்
வீடுவந்து சேர்ந்தேன்...

விடியல் பொழுதில்
இயற்கையில் நனைந்ததால்
தண்ணீரில் உடல்நனைக்க
விரும்பாமல் உள்சென்றேன்...

இரண்டாம் நாளில் -
விழித்தேன் கொரோனா அறையில்...

சீக்கிரம் விழித்தது தவறா???
விடியலை ரசித்தது தவறா???
வாகன புகையில் தவறா???
தேநீர் சுவைத்தது தவறா???
சந்தையை கடந்தது தவறா???
முககவசம் அணியாதது தவறா???
தண்ணீரில் நனையாதது தவறா???

இவை எல்லாம் தவறே...

முதல் தவறு என்பது
நேரம் கடக்க
காரணம் இல்லாமல்
வெளியே சென்றதுதான்...

கொரோனாவை -

காரணம் இல்லாமல்
வெளியே சென்று
முதல் அழைப்பு விடுத்தேன்...

முகக்கவாசம் தவிர்த்து
காற்றை உள்ளிழுத்து
இரண்டாம் அழைப்பு விடுத்தேன்...

சமூக இடைவெளியில்லா
தேநீர் பருகி
மூன்றாம் அழைப்பு விடுத்தேன்...

கூட்டம் தவிர்க்காமல்
நான்காம் அழைப்பு விடுத்தேன்...

கைகளை கழுவாமல்
ஐந்தாம் அழைப்பு விடுத்தேன்...

ஆறாம் விருந்தினராய்
மருத்துவமனையில் கிடந்தேன்...

ஏழாம் நிலையாய்
விண்ணில் பறப்பேனோ!!!

நான் பட்ட துன்பம்
இவ்வையகமும் பெறாமல்
இப்பதிவை பதிகிறேன்...

எழுதியவர் : R Praveenkumar (16-May-21, 1:00 pm)
சேர்த்தது : PraveenKumar R
பார்வை : 111

மேலே