புது தம்பதிக்கு

ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி
என்பது ஒளவை மொழி

நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி
என்பது ஆன்றோர் மொழி
நால்---'நாலடியார்
இரண்டு--- திருக்குறள் (அடிகள் அளவு)

இதை விருட்சமாக கொண்டு புது மணமக்களுக்கு அட்சதையாய் அகத்தில்
தோன்றியது சுருக்கமாக...

அழகும் அறிவும் பெண்மைக்கு அழகு
விவேகமும் பொருளீட்டலும் ஆண்மைக்கு அழகு (ஆண்மை -ஆளுகின்ற தன்மை)

சிக்னமும் சேமிப்பும் பெண்ணுக்கு அழகு
ஆற்றலும் காத்தலும் ஆண்மைக்கு அழகு

மென்மையும் கனிவும் பெண்மைக்கு அழகு
நிதானமும் நிறைமனதும் ஆண்மைக்கு அழகு

அன்புகற்பித்தலும் அகச்சுத்தமும் பெண்மைக்கு அழகு
சுற்றம் போற்றலும் நட்பு பாராட்டலும் ஆண்மைக்கு அழகு

நல்குடும்பம் நலம்பயக்க நாளமெல்லாம்
இதை நிறைந்து நல்குவோம்

வாழிய குடும்பம் வளர்க தம்பதியர்.

எழுதியவர் : பாளை பாண்டி (15-May-21, 8:45 pm)
சேர்த்தது : பாளை பாண்டி
பார்வை : 110

மேலே