நான் அநாதை பூ

வணக்க்கம் விடியலே...

உன்னுடன் நானும்
தனிமையின் தோழியாய்
உடன்வர உருவாக்கப்பட்டவள்...

விருப்போ, வெறுப்போ
நன்மையோ, தீமையோ
உன் நிலைமையின்
மறு பிரதியாய்
நானும் பயணிக்கிறேன்...

மாற்று பாலினம்
தந்த தொல்லைகள்- நான்
எதிர்பார்த்த கேள்விகள்...
என் பாலினமே
தந்த தொல்லைகள்- நான்
எதிர்பாரா தோல்விகள்...

கலவரமாய் பூத்த
முதல் நாள்
அலுவலக பணியில்
என்னை உரசா தோழர்களும்
என்னை சீண்டிய தோழிகளுமே
என் முதல் ஆச்சர்யங்கள்...

மாறிய சமூகத்தின்
முதல் குறியீட்டை
இந்நாளில் கண்டேன்...

ஆனாலும்
மாறாத பேருந்து உரசல்கள்
மாற்றானின் கண் கற்பழிப்புகள்
என்னை ஈர்க்காத காதலனின்
கோமாளி அழிச்சாட்டியங்கள்
இவைகளும் தொடர
என் தனிமை பயணம் தொடர்ந்தேன்...

ஒவொரு இரவினிலும்
எனக்கென மிச்சமிருந்தது
சில இனிமைகளும்
சில இன்னல்களும் ...

பண்டிகை நாட்களில்
தனிமை தருணங்களும்
தனியா தாககங்களும்
அலையா விருந்தாளியாய்
நாட்களின் நிமிடங்களாய்...

நான் அநாதை சருகென்று
மிதித்து கடப்போரின்
சுவடுகளையும் சுமந்து
சிரித்தே போராடுகிறேன்...

அலுவலக பணியில்
நான்கு வருட அனுபவத்தில்
என் ஒருபடி முன்னேற்றம் -
எதிர்பார்த்த கேள்விகளாய்
சில ஆண்களின்
தோல்வி பதில்களும் -
எதிர்பாரா தோல்விகளாய்
சில பெண்களின்
பதில் கேள்விகளும்...

நடைபோடா வயதினில்
என்னை சிரிக்கவைத்த
என் பாலினங்கள் -
நடைபோடும் வயதினில்
என்னை அழவைத்தே
ரசிக்கும் ஜென்மங்களாய்...

மீண்டும் உய்ந்தே பறக்கிறேன் -
எனக்காகவும்,
என் பாலின முதிர்ச்சிக்காகவும்...

விடியலை தேடும் நாம்
முதலில் விழிக்கவேண்டும்...
விழிக்காத விடியல் தேடல்
முழிக்காமல் விடியல் காண்பதுபோல்
(கனவில்)...

எழுதியவர் : R Praveenkumar (23-May-21, 1:57 pm)
சேர்த்தது : PraveenKumar R
Tanglish : naan anaathai poo
பார்வை : 50

மேலே