வாழ்த்துகள் பெற்று வாழ்ந்திருப்போம்

09-மே-2021 ஞாயிறு
-----------------------------------
எப்படி வாழ வேண்டும் என்பதனை..
ஆயிரம் புத்தகங்கள்
சொல்லிக் கொடுக்க முடியாததை
மாமா உங்களின்
ஒரு வாழ்க்கை எங்களுக்கு
சொல்லிக் கொடுத்தது...

முத்தாய் வாழத் தெரிந்த
உங்களுக்கு முத்தையா
என்று மிகப் பொருத்தமாக
பெயர் வைத்திருக்கிறார்கள்...
தாத்தா சுப்பையா செட்டியாரும்..
ஆச்சி பழனியாச்சியும்...

உங்களிடம் பாடம் பயின்ற
நாங்கள் கொடுத்து வைத்தவர்கள்..
உங்களிடம் பயின்ற பாடங்களில்
தலைமுறைகள் அத்தனையும்
மிளிர்ந்திருக்கும்.. ஒளிர்ந்திருக்கும்..

தங்களிடம்... நீதி...
நியாயம்.. நேர்மை..
அன்பு.. பண்பு.. பாசம்..
பெருந்தன்மை... சுறுசுறுப்பு
ஓடி ஓடி உழைத்தல்...
ஊருக்காகவும் உழைத்தல்...
விரைந்து முடிவெடுத்தல்...
விவேகமாய் முடிவெடுத்தல்..
பார்த்து வளர்ந்தோம்.. மனதில்
பதித்து வாழ்வோம்...

தெய்வப் புலவர்
திருவள்ளுவரின் அத்தனை
குறள்களுக்கும் மாமா உங்களின்
வாழ்க்கை உரை எழுதும்...

மாமா.. நீங்கள் மறைந்த
பதினாறாவது நாள் இன்று...
நாட்கள் மட்டுமல்ல
வாரங்கள்... மாதங்கள்...
ஆண்டுகள் எத்தனை ஆனாலும்
உங்கள் நினைவுகள் போற்றி
பயணித்திருப்போம்...
உங்கள் வாழ்த்துகள் பெற்று
வாழ்ந்திருப்போம்...
🙏🌹💐🌺🌸🙏

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (23-May-21, 11:29 am)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 55

மேலே