Thamizhan Mani - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Thamizhan Mani |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 20-Nov-2017 |
பார்த்தவர்கள் | : 73 |
புள்ளி | : 2 |
எம்முடன் நீரும் நேரோ?
எம் செயல்யாவும் செய்வீரே!
உம்செயலறியா செருக்கன் செய்யும் பிழையும் புரிதலின்றி புரிவீரே!
உயிர்த்தலும் உந்துதலும் உமையின்றி
உலகிற்கு உயர்த்தும் உள்ளமுண்டோ..?
மேன்மை கொண்ட கொற்றவையே!
நாரன் நல்கும் நரகு
நல்காது நடவும் நன்மாதரே..,
நேர் கொண்டு பாரீர்!
நிமிர்ந்து நன் நடைசெய்வீர்!
-தமிழன் மணிகண்டன்
தமிழுக்கு களமாடிய கணத்தில்
தமிழால் களவாடிய கள்ளியவள்,
கண்ணிலவள் காட்சி கண்டதுமுதல்
கன்னியவள்மீது காதல் கொண்டேன்,
கண்டதும் காதலென்பது கனவென்று
காலத்தின் கடலில் கப்பலானேன்,
புலனத்திலவள் புதுநிலை பார்க்கும்போதெல்லாம்
புத்தியில் புதிதுபுதிதாய் பூகம்பம்கொள்ளும்,
பலவற்றை பாவையுடன் பகிர்ந்தால்
பழகுதல் பறிக்கப்படுமென்று பயம்கொள்கிறேன்,
இறகாய் இருக்கவேண்டிய இதயம்
இறகுபந்தாய் இடறி இடமாறுகிறது,
நீலகண்டரின் நஞ்சாய் நங்கையவள்
நினைவு நெஞ்சில் நீள்கிறது,
கனத்த நெஞ்சோடு காத்திருக்கிறான்
கம்பன் கன்னியவள் காதலுரைப்பாளென.
தமிழுக்கு களமாடிய கணத்தில்
தமிழால் களவாடிய கள்ளியவள்,
கண்ணிலவள் காட்சி கண்டதுமுதல்
கன்னியவள்மீது காதல் கொண்டேன்,
கண்டதும் காதலென்பது கனவென்று
காலத்தின் கடலில் கப்பலானேன்,
புலனத்திலவள் புதுநிலை பார்க்கும்போதெல்லாம்
புத்தியில் புதிதுபுதிதாய் பூகம்பம்கொள்ளும்,
பலவற்றை பாவையுடன் பகிர்ந்தால்
பழகுதல் பறிக்கப்படுமென்று பயம்கொள்கிறேன்,
இறகாய் இருக்கவேண்டிய இதயம்
இறகுபந்தாய் இடறி இடமாறுகிறது,
நீலகண்டரின் நஞ்சாய் நங்கையவள்
நினைவு நெஞ்சில் நீள்கிறது,
கனத்த நெஞ்சோடு காத்திருக்கிறான்
கம்பன் கன்னியவள் காதலுரைப்பாளென.